மாமன்னன் படத்தில் நடிக்க வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் மாமன்னன். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 4, 2023, 11:19 AM IST
  • மாமன்னன் படம் சுமார் 40-50 கோடியில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • முக்கிய வேடத்தில் நடித்த வடிவேலு ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கலாம் என தகவல்
  • இந்த படத்தில் உதயநிதிதான் அதிக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மாமன்னன் படத்தில் நடிக்க வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? title=

நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் அவருக்கு சம்பளம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாமன்னன் படம் சுமார் 40-50 கோடியில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இப்படத்திற்காக ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த வடிவேலு 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மகன் ஆதி வீரனாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களிலேயே உதயநிதிதான் அதிக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்தார்.

மேலும் படிக்க | எம்.ஜி.ஆர் வழியில் செல்லும் விஜய்..? சினிமாவை விட்டு விலகி சட்டமன்ற தேர்தலில் போட்டியா..?

பின்னர் சக நடிகர்கள், அரசியல் கட்சிகள், இயக்குனர் ஷங்கர் என பல சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து அவருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சிவப்பு அட்டை வழங்கியது. அதன் பிறகு சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தன்னைச் சுற்றியிருந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டு, தற்போது மாமன்னன் நடிப்பில் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார் வடிவேலு. அவரது அடுத்த படமான 'சந்திரமுகி 2' வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய மாரி செல்வராஜ், தேவர் மகன் படம் குறித்த சர்ச்சை குறித்து பேசினார். 

மாரி செல்வராஜின் பேச்சால் அவருக்கு எதிராக பலரும் குரல் எழுப்பினர். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மாமன்னன் படத்தை வெளியிடக் கூடாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர். பல கஷ்டங்களுக்குப் பிறகு படம் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், மாரி செல்வராஜின் மற்ற படங்களைப் போல் அல்லாமல் இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.  மேலும் மாமன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி உள்ளார்.  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் வைரல் ஆகி வருகிறது.  

மேலும் படிக்க | ஃபைண்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட விஜய் சேதுபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News