Valimai Update: வலிமை பர்ஸ்ட் லுக்; இந்த தேதியில் வெளியீடு

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 08:11 AM IST
  • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை
  • அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி
  • வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டம்
Valimai Update: வலிமை பர்ஸ்ட் லுக்; இந்த தேதியில் வெளியீடு title=

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை விரைவில் படமாக்க உள்ளனர். ஒரு சில நாட்களில் ஹைதராபாத்தில் சின்ன சின்ன காட்சிகளை படமாக்கவுள்ளார்கள். இதில் அஜித் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ | விரைவில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ்; வெளியானது முக்கிய தகவல்

கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என அஜித் ரசிகர்களின் தங்கள் அபிமான நடிகர் தல அஜித் வலிமை திரைப்பட அப்டேட் வேண்டுமென அடம் பிடித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அப்டேட் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அஜீத் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் இந்த மாதம் வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15 ஆம் தேதி வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ALSO READ | Watch: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News