விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி

தனது இயக்கத்தில் மகேந்திரசிங் தோனி நடிக்க இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 20, 2022, 04:54 PM IST
  • தோனியுடன் விக்னேஷ் சிவன் சந்திப்பு
  • சந்திப்பு குறித்து மெய்சிலிர்க்கும் விக்னேஷ் சிவன்
  • விரைவில் தோனியை இயக்க உள்ளதாக தகவல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி  title=

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய ரசிகரான விக்னேஷ் சிவன், தல தோனியை அண்மையில் சந்தித்துள்ளார். விஜய் மற்றும் தோனி சந்திப்பின்போது, அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஏங்கிய விக்னேஷ் சிவனுக்கு இப்போது அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. அப்போது, மிகப்பெரிய பூ பக்கெட்டை தோனிக்கு பரிசாக கொடுத்த விக்னேஷ் சிவன், அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஹேக் செய்யப்பட்ட நடிகை காயத்திரியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்

தோனியுடனான சந்திப்பு குறித்து மெய்சிலிர்த்துள்ள விக்னேஷ் சிவன், தன்னுடைய ஹீரோ, ரோல் மாடலை நேரில் சந்தித்தது மிகப்பெரிய தருணம் என இன்ஸ்டாவில் புகழ்ந்துள்ளார். அவரின் வார்த்தைகளில் இருந்தே தோனி மீது விக்னேஷ் சிவன் எவ்வளவு பிரியம் வைத்துள்ளார் என்பது புரிந்து கொள்ள முடியும். இந்த புகழ்ச்சிக்குப் பிறகு அடுத்த ஒரு இனிப்பான செய்தியையும் தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன். அது என்னவென்றால், விரைவில் தோனியை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆனால், அது திரைப்படமா அல்லது விளம்பரப் படமா? என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. ஐபிஎல் 2022 விரைவில் தொடங்க இருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரத்யேகமாக விளம்பரம் தயாரிக்கப்படுவது வழக்கம். ஒருவேளை அந்த வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்துள்ளதா? அல்லது ஐபிஎல் போட்டிக்குப் பிறகு புதிய படத்தில் இணைய உள்ளாரா? என்பது தெரியவில்லை. இருவரும் இருக்கும் புகைப்படத்துக்கு பின்னணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோ இருப்பதால், சிஎஸ்கே பிரத்யேக விளம்பரப் படத்தில் பணியாற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சூப்பர் ஸ்டாரை அடுத்தடுத்து இயக்கும் சிவகார்த்திகேயன் நண்பர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News