‘பீஸ்ட்’டுக்கு வந்த அடுத்த சோதனை!- என்ன செய்யப்போகிறது படக்குழு?!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் வரும் 13ஆம் தேதி வெளியாக நிலையில்  படத்துக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 10, 2022, 05:52 PM IST
  • நடிகர் விஜய்யின் பீஸ்ட் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • பீஸ்ட் படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளன.
  • விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது
‘பீஸ்ட்’டுக்கு வந்த அடுத்த சோதனை!- என்ன செய்யப்போகிறது படக்குழு?! title=

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்துக்கு டிக்கெட் புக்கிங்க் மும்முரமாக நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் விஜய்க்கு முதல் பான் -இந்தியா ரிலீஸ் படமாக அமையவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் 3ஆவது பாடலாக ‘பீஸ்ட் மோடு’ எனும் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்துக்குத் தணிக்கைக் குழு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி, 12 வயதுக்குக் குறைவானவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி இப்படத்தைக் கண்டுகளிக்கலாம்.

பல்வேறு நாடுகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் குவைத் நாட்டில் இப்படத்துக்கு அண்மையில் தடைவிதிக்கப்பட்டது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள்போல சித்தரித்துள்ளதாலும், வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாலும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. முன்னதாக வெளிவந்த விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் மற்றும் குரூப் ஆகிய படங்களும் அந்நாட்டில் இதேபோல் தடைசெய்யப்பட்டன.

மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!

                                                            Beast Vijay

குவைத் அரசு தடைவிதித்துள்ளதால் மற்ற நாடுகளும் தடைவிதிக்க வாய்ப்பு உண்டு என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப்போலவே தற்போது மேலும் ஒரு நாடு ‘பீஸ்ட்’டுக்குத் தடைவிதித்துள்ளது. அந்த வகையில் இம்முறை தடைவிதித்துள்ள நாடு- கத்தார்! குவைத் அரசு எந்தக் காரணங்களுக்காக தடைவிதித்ததாகச் சொல்லப்பட்டதோ அதே காரணங்களை மையமாக வைத்துதான் கத்தாரும் தடைவிதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இவ்வாறு தடை விதிக்கப்படுவதால் படத்தின் காட்சிகளை மாற்றியமைக்க படக்குழு முன்வருமா எனும் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News