ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம்? வதந்திகளுக்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா!

Vijay Devarakonda: நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளனர் என்று தகவல் சமீபத்தில் பரவியது.  

Written by - RK Spark | Last Updated : Jan 20, 2024, 12:24 PM IST
  • ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் நிச்சயதார்த்தம்.
  • இது தவறான செய்தி என்று மறுத்துள்ளார்.
  • மேலும் எங்களுக்குள் எந்த வித உறவும் இல்லை என்று கூறியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம்? வதந்திகளுக்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா! title=

ராஷ்மிகா மந்தனாவுடனான நிச்சயதார்த்த வதந்திகள் குறித்து விஜய் தேவரகொண்டா தற்போது மௌனம் கலைத்துள்ளார். சமீபத்தில் இந்த விசயம் குறித்து விஜய் பேசுகையில், தான் நிச்சயதார்த்தம் செய்யவோ அல்லது திருமணம் செய்து கொள்ளவோ இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.  “எனக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் நடைபெறவில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகள் விரும்புகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியைக் கேட்கிறேன். அவர்கள் என்னைப் பிடித்து திருமணம் செய்ய காத்திருக்கிறார்கள்,” என்று விஜய் தேவரகொண்டா கூறினார்.

மேலும் படிக்க | ‘அயலான்’ படம் பிடிச்சிருக்கா? அப்போ ‘இந்த’ படங்களையும் பாருங்க! கண்டிப்பா பிடிக்கும்..

கடந்த மாதம், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா மாலத்தீவு பயணத்தில் இருப்பதாகவும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும், பிறகு திருமண தேதியை அறிவிக்க போகிறார்கள் என்றும் கூறப்பட்டது.  மேலும் இருவரும் டேட்டிங்கில் உள்ளனர் என்ற செய்தி ஊடகங்களில் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது.  இருப்பினும் "அவர்கள் தங்கள் காதலைப் பகிரங்கமாகச் செல்லத் திட்டமிடவில்லை அல்லது மோதிரங்களை மாறிக்கொள்வதன் மூலம் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லத் திட்டமிடவில்லை" என்றும் அந்த வட்டாரம் கூறி உள்ளது. மேலும் அவர்கள் மிகவும் தனிப்பட்ட நபர்கள். அவர்கள் இதுவரை தங்கள் காதலைப் வெளிப்படுத்தவில்லை, நிச்சயதார்த்தம் செய்துகொள்வது பற்றிய செய்தி போலியானது என்றும் கூறியுள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே ஒன்றாக வாழ்ந்து வருவதால் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றும் மற்றோரு தகவல் கூறுகிறது.  அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள், மகிழ்ச்சியாகவும், தங்கள் உறவு எவ்வாறு செல்கிறது என்பதில் திருப்தியுடனும் இருக்கிறார்கள், மேலும் இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் செய்ய வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரவில்லை. மேலும், அவர்கள் தற்போது தங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறார்கள், எனவே அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்,” என்று கூறுகின்றனர். ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா  இதுவரை தங்கள் உறவை பொதுவில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இருவரும் கீதா கோவிந்தம் (2018) மற்றும் டியர் காம்ரேட் (2019) ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | Bigg Boss Tamil: உனக்காக நான் இருப்பேன்! அர்ச்சனாவிற்கு சப்போர்ட் செய்த மாயா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News