மீண்டும் தொடங்கும் குஷி படப்பிடிப்பு! சமந்தா வருவாரா?

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். 

Written by - RK Spark | Last Updated : Feb 5, 2023, 05:15 PM IST
  • விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்.
  • நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தப்படவில்லை.
மீண்டும் தொடங்கும் குஷி படப்பிடிப்பு! சமந்தா வருவாரா? title=

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியாக நடிக்கும் 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானா- நடிகர் விஜய் தேவரகொண்டா - ' ஹிருதயம்' படம் புகழ் இசைமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மையில் முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர்.

மேலும் படிக்க | நான் ‘லியோ’ இனிமே என் பேரு தளபதி 67 இல்ல! விஜய் திரைப்படத்தின் பெயர் சூட்டு விழா

இதனைத் தொடர்ந்து 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள படத்தின் நாயகியான நடிகை சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'குஷி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதனை 'குஷி' படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | அஜித் புகைப்படத்தை தூக்கிய விக்னேஷ் சிவன்.. AK62 இயக்குநர் யாரு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News