சைலன்டாக உருவாகிவரும் ‘தேவி 2’; ஏப்ரல் 5-ல் வெளியாகிறது!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேவி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Last Updated : Feb 28, 2019, 05:49 PM IST
சைலன்டாக உருவாகிவரும் ‘தேவி 2’; ஏப்ரல் 5-ல் வெளியாகிறது! title=

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேவி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

'லட்சுமி' படத்தைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் அவர்களை வைத்து 'வாட்ச்மேன்' படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. 'வாட்ச்மேன்' படத்தைத் தொடர்ந்து 'தேவி 2' படத்தை இயக்கத் தொடங்கினார் விஜய்.

பிரபுதேவா, தமன்னா, நந்திதா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக விஜய் முடித்துவிட்டார். இப்படத்தின் போஸ்ட் புரடக்ஸன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் தணிக்கைப் பணிகள் முடிவடையவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 5-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  ‘எல்.கே.ஜி’ திரைப்படத்தின் வெற்றி விழா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த அறிவிப்பினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.

விரைவில் தணிக்கை செய்யப்பட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

'வாட்ச்மேன்' மற்றும் 'தேவி 2' ஆகிய படங்களின் வெளியீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி' படத்தில் இயக்குநர் விஜய் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News