ரசிகர்கள் ஹேப்பி!! விஜய் சேதுபதி நடித்துள்ள "கடைசி விவசாயி" படத்தின் ட்ரெய்லர்

நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் "கடைசி விவசாயி" படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 12, 2019, 08:06 PM IST
ரசிகர்கள் ஹேப்பி!! விஜய் சேதுபதி நடித்துள்ள "கடைசி விவசாயி" படத்தின் ட்ரெய்லர் title=

மக்கள் செல்வன் என்றழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் "கடைசி விவசாயி" படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்த படத்தை மணிகண்டன் இயக்கி உள்ளார். இவர் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

"கடைசி விவசாயி" படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கலை இயக்குனர் தொட்டா தரணி. ட்ரைபல் ஆர்ட்ஸ் சமீர் பரத் ராமுடன் இணைந்து நடிகர் விஜய்சேதுபதி தயாரித்துள்ளார். இந்த படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் :கடைசி விவசாயி: படத்தின் ட்ரெய்லர் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

 

 

Trending News