Merry Christmas திரைப்படத்தில் காத்ரீனா கைஃபுடன் இணையும் விஜய் சேதுபதி

திருமணத்திற்குப் பிறகு வேலைக்குத் திரும்பிய கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதியுடன் திரைப்படத்தில் இணைகிறார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 12:03 PM IST
  • விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் காத்ரீனா கைஃப்
  • மும்பைகர் ஹிந்தி திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார்
  • திருமணத்திற்கு பின் காத்ரீனா கைஃப் ஒப்பந்தமான முதல் திரைப்படம்
Merry Christmas திரைப்படத்தில் காத்ரீனா கைஃபுடன் இணையும் விஜய் சேதுபதி title=

புதுடெல்லி: அண்மையில் திருமணமான பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ஹிந்தி திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் திருமணத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். விரைவில் ஸ்ரீராம் ராகவனின் அடுத்த திரில்லர் படமான 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தில் கத்ரீனா நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா நடிக்கவுள்ளார்.

தபு, ஆயுஷ்மான் குரானா மற்றும் ராதிகா ஆப்தே நடித்த 'அந்தாதுன்' படத்தை இயக்கிய  ஸ்ரீராம் ராகவன் அறியப்படுகிறார்.

திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் இந்தத் திரைப்படம் குறித்த செய்தியை உறுதி செய்து ட்விட்டரில் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளார்.  ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர். மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் (Famous Bollywood Actress) முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கத்ரீனா முழு அணியுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

 

ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்தரே தயாரித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் வார இறுதியில் டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பைகார் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காகும். இதில் விஜய் சேதுபதி காமெடி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read | நடிகர் விஜய் நண்பர்களுக்கு உதவமாட்டாரா- சஞ்சீவ் ஓபன் டாக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News