Vikram Movie Update: கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்புடிப்பு இன்று தொடங்கியது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2021, 12:32 PM IST
Vikram Movie Update: கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது title=

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கமல்ஹாசனின் விக்ரம். மாஸ்டர் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெயியாக போகும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது. இந்த படம் நடிகர் கமலின் (Kamal Haasan) 232 வது படம் ஆகும். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. விக்ரம் (Vikram) போஸ்டரில் ரசிகர்களை ஆச்சயப்படுத்திய விசயம் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கிறார் என்பதுதான். அத்துடன் இந்த போஸ்டர் மூலம் இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாஸில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. 

ALSO READ | 'ஆரம்பிக்கலாங்களா?’ என ட்வீட் போட்டு, கமலின் விகரம் பற்றிய அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

இதற்கிடையில் தற்போது இப்படத்தில் 2,3 வில்லன் கதாபாத்திரங்களுக்கு இன்னும் பேச்சு வார்த்ததை நடந்து கொண்டிருப்பாதாக செய்திகள் வெளிவந்தது. 

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் நாள் காட்சியில் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றது. 

ALSO READ | கமலில் "விக்ரம்" படத்தில் இருந்து நடிகர் ராகவா லாரன்ஸ் விலகல்? எனத் தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News