தென்னிந்திய சினிமாவில் பிரபல ஜோடியாக இருந்தவர்கள் சமந்தா மற்றும் நாகசைதன்யா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் மனகசப்பு உருவாகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதன்படி பின் இவர்கள் இருவருமே தனித்தனி பாதையில் பயணித்து வந்தால், இருப்பினும் அவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் எப்போதும் வெளியாகிக் கொண்டே இருந்தன.
இதற்கிடையில் தனது விவாகரத்துக்குப் பிறகு சற்று ஓய்வெடுத்துக் கொண்ட சமந்தா, மீண்டும் சினி துறையில் அசத்தலான ரீ- என்ட்ரி கொடுத்தார். புஷ்பா உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்த அவர், பாலிவுட், ஹாலிவுட் வரை பறந்தார். மறுபுறம் நாகசைதன்யாவும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.
மேலும் படிக்க | துணிவு படத்தில் நாயகியின் குரல் - புதிய அப்டேட்
இதனிடையே நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் (தசை அழற்சி) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் மீண்டும் உடல் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் இந்த செய்தி வெறும் வதந்தி என்றும் அவர் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
அதன்படி வீட்டில் ஓய்வு எடுத்து வரும் சமந்தாவுக்கு தற்போது உள்ளூர் ஆயுர்வேத டாக்டர்களால் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதில் நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
தற்போது இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் சமந்தா செய்த ஒரு செயல் அதிகம் பேசப்பட்டு வருகிறது, அந்தவகையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் அணைத்து புகைப்படங்களை திடீரென டெலிட் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் நாகசைதன்யாவும் பிரபல நடிகை சோபிதா துலிபாலா இருவரும் டேட்டிங் செய்து வருவதை அறிந்த பின் தான் சமந்தா இப்படி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
மேலும் படிக்க | பஜ்ஜி, வடைதான் சாப்பிடுகிறார்கள் - தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்த கருணாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ