சூர்யா- பாலா இடையே மோதல்? கைவிடப்படுகிறதா படம்?! - உண்மை என்ன?

  இயக்குநர் பாலா- நடிகர் சூர்யா இடையே மோதல் என தகவல் உலாவந்துகொண்டிருந்த நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளர் ட்வீட்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2022, 01:56 PM IST
  • சூர்யா 41ஆவது படத்தை பாலா இயக்கிவருகிறார்.
  • பாலா- சூர்யா இடையே மோதல் என தகவல் உலாவந்தது.
  • படம் தொடர்பாக படத்தின் இணை தயாரிப்பாளர் ட்வீட்.
சூர்யா- பாலா இடையே மோதல்? கைவிடப்படுகிறதா படம்?! - உண்மை என்ன? title=

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கிவரும் புதிய படத்தில் தற்போது நடித்துவருகிறார். 

பாலா இயக்கிய நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்த சூர்யா, அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் பாலாவின் படத்தில் சூர்யா நடிக்கிறார். பாலாவையும் சர்ச்சையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவ்வப்போது அவர் தொடர்பாக ஏதேனும் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கும்.

                                                  Suriya

அந்த வகையில் சூர்யா நடிக்கும் இப்படம் தொடர்பாகவும் சில தகவல்கள் உலாவந்தன. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்சனை எனவும் சூர்யா படப்பிடிப்பு தளத்திலிருந்து கோபத்துடன் வெளியேறிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்துவந்தனர். 

இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுவந்தது. பொதுவாக பாலாவின் படங்களில் பிரச்சனைகள் எழுவது வழக்கம் எனும் காரணத்தால் இதுவும் ஒரு வகையில் உண்மைதானோ என பலர் கருதிவந்தனர்.ஆனால் இது உண்மையல்ல எனத் தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது இப்படத்தைத் தயாரித்துவரும் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவன இணை தயாரிப்பாளர் ராஜசேகரின் ட்விட்டர் பதிவு.

மேலும் படிக்க | ‘ஜெட்’ வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ‘KGF’ டைரக்டர்! - அதுவும் இத்தனை கோடியா?

                                                

இப்படம் பற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படம் முழுமூச்சுடன் சிறப்பாகச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜசேகரின் இப்பதிவு, இப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் உலாவந்த ஆதாரமற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க | நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News