Watch: இணையத்தில் லீக்கான எமி - ரஜினியின் ‘2.0’ என்ட்ரி வீடியோ...

2.0 திரைப்படம் நாளை வெளியாக ருக்கும் நிலையில் இணையதளத்தில் வெளியான எமி ஜாக்சனின் ‘2.0’ திரைப்படத்தின் புதிய என்ட்ரி வீடியோ! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2018, 11:08 AM IST
Watch: இணையத்தில் லீக்கான எமி - ரஜினியின் ‘2.0’ என்ட்ரி வீடியோ... title=

2.0 திரைப்படம் நாளை வெளியாக ருக்கும் நிலையில் இணையதளத்தில் வெளியான எமி ஜாக்சனின் ‘2.0’ திரைப்படத்தின் புதிய என்ட்ரி வீடியோ! 

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதராசப்பட்டினம். இப்திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் '2.0' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் திரைப்படன் போது எடுக்கப்பட்ட ஒவ்வொரு வீடியோக்களை யும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ‘2.0’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகை எமி ஜாக்சன் அவரது முதல் ஸ்டண்ட் வீடியோவை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது "நாங்கள் 2.0 க்காக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், சில சிறந்த நடிகர்கள் ஸ்டண்ட் ப்ரெஸ்ட்டை தொடங்க சென்னைக்கு சென்றனர். இது தான் எங்களின் முதல் பயிற்சி, எளிதில் தவறுகளை கண்டறிய முடியும் என்பதால், இதனை நாங்கள் ஸ்லோ மோஷனில் தான் படமாக்கினோம்" எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

2.0 இரண்டு மணி நேரம் 28 நிமிடங்கள் நீளமுடைய திரைப்படம் (148 நிமிடங்கள்) மற்றும் ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியது. நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இன்று திரைப்படக்குழுவினர் 2.0-வின் BGM வெளியிடுள்ளதாக தெரிவித்துள்ளனர்!  

 

Trending News