குக் வித் கோமாளி..சிவாங்கியின் கலக்கல் சமையலுக்கு இவங்க தான் காரணம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது வித விதமாக சமைத்து கலக்கி வரும் சிவாங்கியின் செப் ட்ரேனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த சீசனில் நடிகர் தர்ஷனுக்கு ட்ரேனராக இருந்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2023, 09:20 AM IST
  • சிவாங்கியின் அற்புதமான குக்கிங்க்கு இவரதானா காரணம்?
  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டுவிஸ்.
குக் வித் கோமாளி..சிவாங்கியின் கலக்கல் சமையலுக்கு இவங்க தான் காரணம் title=

குக் வித் கோமாளி சீசன் 4: குக் வித் கோமாளி தொடர்தான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது நான்காவது சீசன் வரை கொண்டு வந்திருப்பதன் மூலம், தொடரின் வெற்றியையும், வீச்சையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அந்த தொடரில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோரின் கூர்மையான தீர்ப்புகள் முதல் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை அனைத்து அம்சங்களும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. சனி, ஞாயிறு தினங்களில் வரும் அந்த ஒருமணிநேர எபிசோட்களை பார்க்க தொலைக்காட்சியிலும், மொபைலிலும் அனைவரும் மூழ்கிவிடுவார்கள். 

அப்படி  ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்கு ஆக களமிறங்கி கலக்கி வருகிறார். இதனிடையே இந்த ஷோவில் இருந்து தற்போது வரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால் ஆகிய 4 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். 

மேலும் படிக்க | ரஜினியின் கேரக்டர் சீக்ரெட்டை சொன்ன ஜெயிலர் பட நடிகர்... என்ன தெரியுமா?

இந்த நிலையில் தற்போது 15 வாரங்கள் கலக்கலாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், சிவாங்கி அட்டகாசமாக குக் செய்து வருகிறார். இவர் இதுவரை ஒரு முறை செப் ஆஃப் தி வீக் மற்றும் இமமுனிட்டி பாண்ட் இரண்டையுமே பெற்றுள்ளார். நம்ம சிவாங்கியா இப்படி குக் பண்றாங்க என்று பலர் ஆச்சிரியத்தில் உள்ளது. அந்தவகையில் தற்போது  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித விதமாக சமைத்து கலக்கி வரும் சிவாங்கியின் செப் ட்ரேனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் செப் சரவணன் ஆவார். இவர் கடந்த சீசனில் நடிகர் தர்ஷனுக்கு ட்ரேனராக இருந்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saravanan (@saravananchef)

தற்போது செப் சரவணன், சிவாங்கி மற்றும் தர்ஷன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இனஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | காதல் சுகுமார் இயக்கத்தில் நடிக்கப்போகும் காமெடி நடிகர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News