Watch: வெளியானது சமந்தா நடிப்பில் உருவான ‘ஓ பேபி‘ Trailer...

சமந்தா நடிப்பில் உருவான ‘ஓ பேபி‘ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது!! 

Updated: Jun 20, 2019, 02:25 PM IST
Watch: வெளியானது சமந்தா நடிப்பில் உருவான ‘ஓ பேபி‘ Trailer...

சமந்தா நடிப்பில் உருவான ‘ஓ பேபி‘ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது!! 

சமந்தாவின் சுட்டித்தனம் எப்போதுமே ரசிக்கும்படிதான் இருக்கும். நடை, உடல் மொழி, முகப்பாவனைகள் என எல்லா ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்து சுட்டிப்பெண்ணகவே திரையில் மாறிவிடுவார். மனம், பத்து எண்றதுக்குள்ள என இதுபோன்ற கதாபாத்திரங்கள் எப்போதுமே சமந்தாவின் கோட்டைதாம். 'ஓ பேபி' படத்தின் தமிழ் வெர்ஷினின் டீசரிலும் அதையே வெளிக்காட்டியுள்ளார் அவர்.

BV நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா  "ஓ பேபி" என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படத்தை சுனிதா டாடி தயாரித்துள்ளார். மேலும் "ஓ பேபி" திரைப்படம் , 2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான‌ 'மிஸ் கிராணி' படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது. 

இத்திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ் , நாகா சௌர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரிலீஸுக்கு தயாராகி வரும் `ஓ பேபி' படத்திலிருந்து ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  70 வயதான பாட்டி லட்சுமி 25 வயது சமந்தாவாக மாறிய பின் நடக்கும் சுவராஸ்யமான நிகழ்வுகளும், பாசப்போராட்டங்களும் இந்த படத்தின் கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தரப்பில் தொடர்பில் உள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.