ரஜினியுடன் அரசியல் பேசத் தயார்: கமல்

Last Updated : Sep 16, 2017, 08:23 AM IST
ரஜினியுடன் அரசியல் பேசத் தயார்: கமல் title=

கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் தமிழக அரசியலை பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இவர் தொடர்ந்தது டிவிட்டர் மூலம் அரசியலுக்கு வந்து விட்டேன் என்றும் கூறியிருந்தார். 

இதன் மூலம் கமல் தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்று கூறியிருக்கிறார். 

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல், மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கூறியிருக்கிறார். 

மேலும் ரஜினி விரும்பினால் அணியில் இணைத்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன். நான் தொழிலுக்காக நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்றும் கமல் குறிப்பிட்டார்.

Trending News