சென்னை, கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியது:-
நான், உழவன் மகன் இல்லை என்றாலும், உழவனின் மருமகன். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான் என்பதை மறந்துவிட்டோம். ஜனநாயகத்தில் விவசாயிகள் தான் எஜமானர்கள். இங்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை. சோறு சேகரிக்க வந்துள்ளேன்.
கடந்த 50 ஆண்டுகளாக நாம் தூங்கி விட்டோம். இனியாவது விழித்து கொள்வோம். புராண காலங்களில் பாலம் கட்ட அணில் உதவியது போல் விவசாயிகளுக்கு உதவிட நான் ஒரு ஜந்துவாக இருப்பேன்.
மற்ற மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது நடக்கவில்லை. தமிழகத்தில் ஒரு ஆறையே காணவில்லை. இது குறித்து இன்னும் 3 நாட்களில் தெரிவிக்கிறேன்.
டெல்லியில் என்னை ஒருவர் பொறுக்கி என்றார். ஆமாம், நான் பொறுக்கி தான், அறிவு மொழி சார்ந்த ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.