மாவீரனுக்கு பிறகு யோகிபாபுவின் அடுத்த படம்! வெளியானது அப்டேட்!

யோகி பாபு நடிக்கும் புதிய படமான ‘வானவன்’ டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை - நடிகர் GV Prakash Kumar மற்றும் மாவீர இயக்குநர் மடோனா அஸ்வின் வெளியிட்டனர்.   

Written by - RK Spark | Last Updated : Jul 23, 2023, 06:08 PM IST
  • அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்கும் யோகிபாபு.
  • மாவீரன் படத்தில் யோகிபாபு காமெடி பரவலாக பேசப்பட்டது.
  • இரண்டு படங்களின் பூஜை நடைபெற்றுள்ளது.
மாவீரனுக்கு பிறகு யோகிபாபுவின் அடுத்த படம்! வெளியானது அப்டேட்! title=

யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. யோகி பாபுவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸ் மாஸ்குரேட் இயக்கியுள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா ஆகியோர் பல தரப்பட்ட பாடல்களுக்குப் பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் கைகோர்க்க உள்ளனர்.

மேலும் படிக்க | AI மூலம் மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?

vanavan

இந்த இளம் படக்குழுவினர் மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடித்துள்ளனர், EDENFLICKS PRODUCTIONS தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தை தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒருபுதுவித அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது Feel Good, Fantasy மற்றும் யோகி பாபுவின் நகைச்சுவை அவரது  ரசிகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களால் விரும்பப்படும் வகையில் அமைந்துள்ளது.

இந்த படம் தவிர யோகிபாபு நடிக்கும் மற்றொரு வெப் சீரிஸின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.  "சட்னி சாம்பார்" என்று இந்த சீரிஸ்க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், "சட்னி - சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார்.

நடிகர் யோகிபாபு கூறுகையில், "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக "சட்னி சாம்பார்"  இருக்கும்" என்றார்.  நடிகை வாணி போஜன் கூறுகையில், "டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்" என்றார்.  இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் சுந்தர்ராஜன் இந்தத் சீரிஸில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார், இதில் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.  பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று புகழ் பெற்ற அஜீஷ் அசோக் இசையமைக்கிறார்.  

மேலும் படிக்க | நோலன் ரசிகர்களால் இந்தியாவிலும் கோடிகளை குவிக்கும் Oppenheimer... முதல் நாள் வசூல் இவ்வளவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News