மே 8-ல் முதல் சண்டக்கோழி சீரியல்.. கதாநாயகன் யாரு தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதியதாக சண்டக்கோழி சீரியல் மே 8 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. புதிய சீரியலின் கதைக்களம் என்ன? என்பதை பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 4, 2023, 01:17 PM IST
  • சண்டக்கோழி சீரியல் அப்டேட்
  • ஜீ தமிழில் புதிய சீரியல்
  • மே 8 முதல் ஒளிபரப்பாகிறது
மே 8-ல் முதல் சண்டக்கோழி சீரியல்.. கதாநாயகன் யாரு தெரியுமா?  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில் வரும் மே 8-ம் தேதி முதல் மதியம் 2 மணிக்கு சண்டக்கோழி என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நாயகியாக ரியா விஸ்வநாதன் நடிக்க அவருக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் சீரியல் புகழ் நியாஸ் நடிக்கிறார். இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பெண்கள் என்றாலே வெறுப்பு, கோபம் என வளரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த விக்ரம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது குடும்பத்துக்காக கேட்டரிங் பிசினஸ் செய்து வருகிறார் மகா. ஜாலியான பெண்ணாகவும் அதே சமயம் தனக்கோ தனது குடும்பத்துக்கும் பிரச்சனை என்றால் சண்டைக்கோழியாகவும் இருந்து வருகிறார் மகா. விக்ரம், மகா என இருவரின் முதல் சந்திப்பும் மோதலில் தொடங்குகிறது. அதன்பிறகு இந்த மோதல் காதலாக மாறுகிறதா? இல்லையா? இவர்கள் திருமண பந்தத்தில் எப்படி இணைகிறார்கள்?.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: டென்ஷனான சீதா.‌. மகாவுக்கு விட்ட சூப்பர் சவால்!!

அதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பதை மையமாக கொண்டு சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்தது. மேலும் இந்த சீரியலில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றியும் பார்க்கலாம். ஹீரோவின் அம்மாவாக கிருபா நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அப்பாவாக சேதுபதி என்பவர் குரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு ஹீரோவின் தம்பியாக செம்பருத்தி சீரியல் புகழ் கதிர் விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நியாஸ் தங்கையாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கீர்த்தி.  பி.ஏ-வாக பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஜா. 

அதே போல் ஹீரோயின் அம்மாவாக தமிழ்செல்வி ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அப்பாவாக கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிவகுமார். ஹீரோயின் அக்காவாக ஐஸ்வர்யா என்பவர் நடிக்க தங்கையாக மோகனா என்பவர் நடிக்கிறார். சீரியல் வில்லியாக அனிஷா ஐஸ்வர்யா நடிக்க அவரது அப்பா அம்மாவாக அசோக் பாண்டியன் மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். வில்லியின் அண்ணனாக நவீன் என்பவர் நடிக்கிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக உள்ள சண்டைக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஜெஸ்ஸி டூ குந்தவை..ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷாவின் கதாப்பாத்திரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News