மணமேடையில் விஜய், ஐஸ்வர்யா! சண்டக்கோழி சீரியல் அப்டேட்!

Sandakozhi Serial Update: வெளிவந்த அசோக்கின் உண்மை முகம்... மணமேடையில் விஜய், ஐஸ்வர்யா.. ஆனாலும்? - உச்சகட்ட திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல்!  

Written by - RK Spark | Last Updated : Jul 20, 2023, 11:48 AM IST
  • வெளிவந்த அசோக்கின் உண்மை முகம்
  • மணமேடையில் விஜய், ஐஸ்வர்யா.. ஆனாலும்?
  • உச்சகட்ட திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல்!
மணமேடையில் விஜய், ஐஸ்வர்யா! சண்டக்கோழி சீரியல் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சண்டக்கோழி. இது சீரியலில் ஐஸ்வர்யா கலியாண ஏற்பாடுகள் நடந்து வர அசோக் நல்லவன் இல்லை என்ற விஷயம் மகாவுக்கு தெரிய வந்த நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, விக்ரம் மற்றும் மகா இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட்டு அசோக்கை கடந்த ஏற்பாடு செய்கின்றனர். மறுநாள் காலையில் மாப்பிள்ளையை காணோம் என எல்லோரும் தேட அசோக் ஜாக்கிங் டிரஸ்ஸில் வந்து நிற்க மகா, விக்ரம் அதிர்ச்சி அடைகிறார்கள். ரவுடிகள் தவறுதலாக புலி முருகனை கடத்திய விஷயம் தெரிய வருகிறது. 

மேலும் படிக்க | பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி..! விஜய் படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்கிறார்..!

அடுத்ததாக அசோக் விஜயை கடத்தி ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்ட திட்டமிட மகாவும் விக்ரமும் விஜயை எங்கெங்கோ தேடுகின்றனர். மறுபக்கம் அசோக், ஐஸ்வர்யா மணமேடையில் இருக்க கல்யாண வேலைகள் பரபரப்பாக நடக்கிறது. ஒருகாலத்தில் விஜய் கண்டுபிடிக்க படுகிறான். அவனுடன் விக்ரம், மகா கல்யாணத்தை நிறுத்த வர அசோக் தாலி கட்ட போகும் தருணத்தில் டிவியில் அவன் கொடுத்த வாக்குமூல வீடியோ ஒளிபரப்பாக அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

sanda

விக்ரம், மகா உட்பட எல்லோரும் அதிர்ச்சியில் இருக்க அசோக் இது பொய்யான வீடியோ என சொல்ல ஜோதி பளாரென அறைகிறாள். அடுத்ததாக பல உண்மைகள் வெளியே வர ஐஸ்வர்யாவும் விஜயும் மணமேடை ஏற்கின்றனர். ஆனால் இதை விஷயம் அறியும் நந்தினி கல்யாணத்தை நிறுத்த வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  எனவே சண்டக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News