ட்விட்டரில் ட்ரண்ட் ஆகும் "#ZeeTamilLogoMissing"!

Last Updated : Oct 14, 2017, 04:11 PM IST
ட்விட்டரில் ட்ரண்ட் ஆகும் "#ZeeTamilLogoMissing"! title=

மெர்சல் படத்தின் ட்ரண்டிற்கு அடுத்து கடந்த 2 நாட்களாக ட்விட்டரில் ட்ரண்ட் அடித்து வருவது #ZeeTamilLogoMissing தான்!

சின்னதிரை பிரபலங்கள் முதல், கோலிவுட் பிரபலங்கள் வரை அனைவரும் இதுகுறித்த கேள்விகளுடன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஏன்... ’ஜீ தமிழ்’ தொலைகாட்சியும் இதுகுறித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது.

(நன்றி : @zeetamil)

 

#அழகானமாற்றம் என்ற டேகில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் வரும் பாவை, "ஒளியில் மாற்றம், ஒலியில் மாற்றம், அழகான மாற்றத்தின் தொடக்கம் விரைவில்.." என குறிப்பிடுகின்றார். மேலும் அந்த வீடியோவில் தொலைகாட்சியின் லோகோ காண்பிக்கப்படவில்லை. 

இது தான் இந்த #ZeeTamilLogoMissing காரனமா?

விரைவில் புது தோற்றத்துடன் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க வருகிறதா ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சி? பொறுத்திருந்து பார்ப்போம்!

Trending News