தேசிய விருதை புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் அனுப்ப முடிவு!

தேசிய விருது வழங்கும் விழாவை புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் விருதை அனுப்ப முடிவு! 

Last Updated : May 6, 2018, 02:14 PM IST
தேசிய விருதை புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் அனுப்ப முடிவு!  title=

தேசிய விருது வழங்கும் விழாவை புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் விருதை அனுப்ப முடிவு! 

தேசிய விருது விழங்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தவர்களுக்கு தபால் மூலம் விருது மீண்டும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது!சமீபத்தில் 65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் கையால் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் முதல் முறையாக 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது வழங்குவார் என்று கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விருதுக்கு தேர்வானவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் விழாவை புறக்கணித்தனர்.

இதற்கிடையில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது வழங்கி கௌரவித்தார்.இந்நிலையில் விழாவை புறக்கணித்தவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் தபால் மூலம் வீட்டிக்கே அனுப்பி வைக்க தகவல் ஒலிபரப்பு துறை முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாதவர்களுக்கு தபாலில் அனுப்புவதை மத்திய அரசு வழக்கமாக கொண்டுள்ளது. தற்போதும் அதனையே பின்பற்ற உள்ளது.

 

Trending News