கேரளாவைச் சேர்ந்த தாமராட்சன் என்ற மெக்கானிகல் இன்ஜினியர், தனது மனைவி அபிலாஷா மற்றும் இரு குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். 2018-ம் ஆண்டு பைலட் உரிமம் பெற்ற இவர், தனது குடும்பத்தினரோடு சுற்றுலா செல்ல இருவர் செல்லும் வகையிலான விமானங்களை வாடகைக்கு எடுப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார்.
அவருக்கு 2 குழந்தைகள் பிறந்த நிலையில், 4 பேர் அமரும் வகையிலான விமானம் வாடகைக்கு கிடைப்பது சிரமமாகியது. இதனைத் தொடர்ந்து, 4 பேர் அமரும் விமானத்தைத் தானே உருவாக்க தாமராட்சன் யோசனை செய்தார். அப்போது, ஜோகன்னஸ்பர்க்கில் இயங்கும் ஸ்லிங் ஏர்கிராஃப்ட் நிறுவனம், 2018-ம் ஆண்டில் ஸ்லிங் டிஎஸ்ஐ என்ற புதிய விமானத்தை அறிமுகப்படுத்தியது. அவர்களது ஆலையை சுற்றிப்பார்த்த பிறகு, தனது சொந்த விமானத்தை உருவாக்கும் முடிவுக்கு வந்தார் தாமராட்சன்.
மேலும் படிக்க | IRCTC Nepal Tour: நேபாளம் சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கும் ஐஆர்சிடிசி
அவரது யோசனைகளுக்கு எல்லாம் வடிவம் கொடுக்கும் வகையில் வந்தது கொரோனா ஊரடங்கு. ஊரடங்கின்போது, சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து விமானத்தை கட்டமைக்கத் தொடங்கியதாகவும், கடந்த பிப்ரவரியில் தான் அதன் பணிகள் முடிந்ததாகவும், தாமராட்சனின் மனைவி அபிலாஷா கூறியுள்ளார். இந்த விமானத்தைக் கட்டமைக்க இந்திய மதிப்பில் ரூ.1.8 கோடி செலவாகி உள்ளது.
இந்த விமானத்திற்கு G-தியா என தங்களது இளைய மகளின் பெயரைச் சூட்டியுள்ளனர் தாமராட்சன் - அபிலாஷா தம்பதி. இவர்கள் தங்களது சொந்த விமானத்திலேயே ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | Breaking: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
மேலும் படிக்க |