Breaking: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Earthquake in Philippines: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், மணிலாவில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 27, 2022, 08:30 AM IST
  • பிலிப்பைன்சின் லூசான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
  • 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
  • மணிலாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது
Breaking: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் title=

Earthquake in Philippines: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், மணிலாவில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வடக்கு பிலிப்பைன்ஸில் புதன்கிழமை காலை 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. 

மேலும் படிக்க | அந்தமானில் ஒரே நாளில் 6வது நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

நிலநடுக்கம் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது: நிலநடுக்கத்தின் மையம் காலை 8:43 மணிக்கு லூசோன் பிரதான தீவில் உள்ள ஆப்ரா மலைப் பிரதேசத்தில் உள்ள டோலோரஸுக்கு கிழக்கு-தென்கிழக்கே 11 கி.மீ. (0043 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Ilocos Surஇல் உள்ள வரலாற்றுச் சின்னமான பாண்டே பெல் கோபுரம், இன்று காலை தாக்கிய 7.3 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து பீதியடைந்த மக்கள் தங்கள் கட்டிடங்களுக்கு வெளியே ஓடினார்கள். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வால் மற்றும் கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்தன என்று போலீஸ் மேஜர் எட்வின் செர்ஜியோ AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.  

"நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது," என்று கூறிய செர்ஜியோ, காவல் நிலைய கட்டிடத்தில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு நடவடிக்கையின் ஒரு வளைவான பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" மீது அமைந்திருக்கும் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து நிலநடுக்கங்களால் அதிர்கிறது.

மேலும் படிக்க | ஒரு டிரில்லியன் டாலர் கற்பனை நகரத்தை உருவாக்கும் சவூதி அரேபியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News