ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கக்கூடாது: சீமான்

Sri Lanka Crisis: ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 12, 2022, 02:53 PM IST
  • இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.
  • இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்காக தமிழகத்தின் பல தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
  • ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது: சீமான்
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கக்கூடாது: சீமான் title=

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்கள் தற்போது வன்முறையின் வெறியாட்டத்தை அனுபவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், இலங்கை அரசியல் சூழல் குறித்தும், இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்காகவும் தமிழகத்தின் பல தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்த தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். இலங்கை பிரச்சனை பற்றிய அறிக்கையை வெளியிட்ட சீமான், ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து, இனப்படுகொலையாளிகளான ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் ஓட ஓட விரட்டப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகள் உட்பட உடமைகள் தீயிட்டு கொளுத்தப்படும் காட்சிகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. 

சிங்கள இனவாதமும், பௌத்த மதவாதமும் இணைந்து தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையை தகர்த்து, அதற்காக போராடிய மக்களை இனப்படுகொலை செய்து அழித்தொழித்தது. மக்களின் நலனின் அக்கறை செலுத்தாமல், மத, இன வெறியை மக்களுக்கு ஊட்டி, தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்த்து, அதன் மூலம் மாறி மாறி அரசாண்ட சிங்கள கொடுங்கோன்மை ஆட்சியாளர்களே இன்று இலங்கையில் நடக்கும் அத்தனை துயரங்களுக்கும் மூல காரணம்.

மேலும் படிக்க | தமிழ் இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை: விஜயகாந்த் அறிக்கை 

அதற்கு துணை போன சிங்கள மக்கள் ஐம்பதாண்டுகள் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை, பொருளாதார நெருக்கடிகளை இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர். ஒரு நாட்டில் உண்ண உணவும், குடிக்க நல்ல நீரும் கிடைக்காத போது அங்கு புரட்சி ஏற்படுவதை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதற்கு நிகழ்காலச் சாட்சியாக இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் அமைந்துள்ளன.” என்று கூறியுள்ளார். 

இலங்கையில் வாடும் தமிழ் மக்களுக்காக பல தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்றி பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

‘இலங்கையில் பயங்கரமான பாதிப்புகளை அனுபவித்து, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களின் சாபத்தின் காரணமாகத்தான் இன்று இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது’ என தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இலங்கைத் தமிழர்களை மத்திய மாநில அரசுகள் காத்திட வேண்டும்: டிடிவி தினகரன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News