தமிழக அரசு சார்பில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பில் 50 மெட்ரிக் டன் பால் பவுடர், ரூ.28 கோடி மதிப்பில் 137 வகையான மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை பைகளில் அடைக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த 18-ம் தேதி மாலை சென்னை துறைமுகத்தில் இருந்து முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்தகட்டமாக விரைவில் நிவாரண பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க | Sri Lanka Crisis: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைத் தூதருடன் முக்கிய ஆலோசனை
இதற்காக அனைத்து பொருட்களும் பொட்டலமிடப்பட்டு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் செல்லும் சாலையில் உள்ள கோவில்பிள்ளை நகர் பெட்ரோல் பங்க் அருகே ஒரு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பொருட்களை இன்று காலை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டார். பொருட்கள் அனைத்தும் கணக்கில் உள்ளபடி சரியான அளவில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை அவர் ஆய்வு செய்தார்.
விரைவில் அந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR