12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசியில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை

Jupiter Transit 2023: இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி குரு மீன ராசியில் அஸ்தமித்து ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைவார். குரு மீனத்தில் அஸ்தமித்த பிறகு, ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷத்திற்கு உதயமாகுவார்.

ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி குரு மீன ராசியில் அஸ்தமித்து ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசியில் இடப் பெயர்ச்சி அடைவார். குரு அஸ்தமனம் சில ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையிலும், ஆரோக்கியத்திலும், பொருளாதார நிலையிலும் பல ஏற்ற தாழ்வுகளைக் தரும். அப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /5

மிதுன ராசி: வணிக வகுப்பினருக்கு நேரம் கடினமாக இருக்கலாம். வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும்.  

2 /5

கன்னி ராசி: தாம்பத்திய உறவில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டி இருக்கும். உங்கள் மனைவியுடன் தகராறு ஏற்படலாம். உங்கள் வாழ்க்கையில் பல வகையான பிரச்சினைகள் ஏற்படலாம்.

3 /5

தனுசு ராசி: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தாயின் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.  

4 /5

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களின் பேச்சில் கவனம் தேவை. உங்கள் வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம்.  

5 /5

மீன ராசி: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். பணித் துறையில் நீங்கள் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உங்களுக்கு பணிச்சுமையும் அதிகமாக இருக்கும். உங்கள் நிதி நிலையும் பாதிக்கப்படலாம்.

You May Like

Sponsored by Taboola