IPL 2024: இந்த ஆண்டு ஸ்டேண்ட்ஸில் அமர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அழகு முகங்கள்

IPL 2024: ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஐபிஎஃல் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொல்கத்தா அணியின் வெற்றியுடன் நடந்து முடிந்தது. காவ்யா மாறன், பிரீத்தி ஜிந்தா, அனுஷ்கா சர்மா, சாக்ஷி தோனி என இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்ற அழகு பெண்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

IPL 2024: கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்த அதே நேரத்தில் பார்வையாளர்கள் பகுதியிலும் சில முகங்கள் உலக அளவில் பிரபலமாயின. இந்த ஐபிஎல் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நபர்களில் எஸ்ஆர்எஹ் அணியின் ஓனர் காவ்யா மாறனுக்கு முதலிடன் என்றே கூறலாம். காவ்யா மாறனுடன் இந்த ஆண்டு நம் கவனத்தை கவர்ந்து ஆட்டத்தை விட்டு நம்மை கொஞ்சம் டைவர்ட் செய்த அழகு பதுமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

கொல்கத்தா அணியின் வெற்றியுடன் 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் திருவிழா நடந்து முடிந்தது. கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்த அதே நேரத்தில் பார்வையாளர்கள் பகுதியிலும் சில முகங்கள் உலக அளவில் பிரபலமாயின. ஆட்டத்தை விட்டு நம்மை கொஞ்சம் டைவர்ட் செய்த அழகு பதுமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.    

2 /8

SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தன் அழகால் மட்டுமல்லாமல் தன் அணிக்கு அவர் காட்டிய அசாதாரண ஆதரவு, தன் அணி மீது அவர் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை காரணமாகவும் இந்த ஆண்டு மிகவும் பிரபலமானார். அனைத்து அணிகளிலும் சிறந்த அணி உரிமையாளர் என்ற பட்டத்தையும் பலர் அவருக்கு அளித்துள்ளனர்.   

3 /8

SRH அணி தோற்றபோதெல்லாம் அவர் முகத்தில் தெரிந்த சோகம், அந்த அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரை கலங்க வைத்தது. காவ்யா மாறனை மீண்டும் சிரிக்க வைக்கவாவது SRH அணி வெல்ல வேண்டும் என்பது போன்ற மீம்கள் இணையத்தை ஆட்கொண்டன.

4 /8

SRH அணியிலேயே, இந்த ஐபிஎல் 2024 -இல் பிரபலமான மற்றொரு பெண். கோமல் சர்மா அபிஷெக் சர்மாவின் சகோதரி. குவாலிஃபையர் 1 இல் KKR க்கு எதிராக SRH இன் தோல்விக்கு பிறகு, கோமல் ஷர்மா தனது சகோதரர் அபிஷேக் ஷர்மாவின் உற்சாகத்தை உயர்த்த ஒரு உணர்வுப்பூர்வமான பதிவை எழுதினார். இது பலரது கவனத்தை ஈர்த்தது. கோமல் சர்மாவும் SRH அணிக்கு கூடுதல் உறுதியை அளித்த பெண் சிங்கமாக பிரபலமானார்.

5 /8

பிரபல பாலிவுட் நடிகையான பிரீத்தி ஜிந்தா எப்போதும் இளமையாக இருக்கும் வரம் பெற்று வந்துள்ளாரா என அனைவரையும் யோசிக்க வைப்பவர். இந்த ஆண்டும் தன் அணியை ஊக்குவித்து ஆதரவு அளிக்க அவர் அனைத்து போட்டிகளிலும் ஸ்டேண்ட்ஸில் காணப்பட்டார். அணி தோற்றாலும் முகத்தில் சிரிப்பு மாறாமல் வீரர்களை ஊகுவிக்கும் அவரது குணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

6 /8

விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆர்சிபி அணியின் அனைத்து போட்டிகளிலும் காணப்பட்டார். மைதானத்தில் கோலி, ஸ்டேண்டில் அனுஷ்கா-செய்கைகளில் இவர்களின் பேச்சு அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.

7 /8

சென்னை அணியின் தல தோனியின் மனைவி சாக்ஷி தோனி ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய ரசிகராகவும், அணிக்காக பிரார்த்திக்கும் அபிமானியாகவும் இருந்துள்ளார். இவரது ஒவ்வொரு ரியாக்சனும் வைரல் ஆவதுண்டு. 

8 /8

பாலிவுட் ஹீரோ ஷாருக் கானின் மகள் சுஹானா கானும் அவரது தோழிகளின் கூட்டமும் KKR டக்-அவுட்-டை களைகட்டச் செய்தனர். சுஹானா பல KKR வீரர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டு அணியுடன் ஒரு குடும்பம் போலவே பேசி மகிழ்ந்தது இணையத்தில் வைரல் ஆனது.