2023 First Sani Gochar January 17: மந்தன், ரவிபுத்ரன், ஜடாதரன், ஆயுட்காரகர் என பல பெயர்கள் கொண்ட. சனீஸ்வரர் நீதிதேவன். கர்ம வினைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சுக துக்கங்களை நிர்ணயிக்கும் சனி பகவான் ஜனவரி 17ம் தேதி ராசி மாறவிருக்கிறார். தனது தசாபுக்தி காலத்திலும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி போன்ற காலங்களிலும் சனிபகவான், நீதிபதியாக செயல்பட்டு கர்மங்களை வேரறுப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் பகைவர்களுக்கு உரிய இடத்தில் இருந்தாலும், பலம் இழந்து இருந்தாலும், அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும். சனீஸ்வரர் கொடுக்கும் துன்பங்களை நீக்க 12 ராசிகளும் என்ன செய்யலாம்? தெரிந்துக் கொள்வோம்
சனிக்கிழமைகளில் மாமிசம் தவிர்க்கவும்
சனி பகவானுக்கு நேர் எதிரில் நின்று வணங்க வேண்டாம்
ஆஞ்சநேயர் வழிபாடு பலன் தரும்
காகத்திற்கு உணவு வைப்பதை தவறாமல் செய்யவும்
சனிக்கிழமைகளில் எள் சாதம் செய்து, பிரசாதமாக ஏழைகளுக்கு விநியோகிக்கவும்
நீல நிற மலர்களை சனீஸ்வரருக்கு சாற்றவும்
சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று சிவாலயத்தில் இருக்கும் சனிக்கு அர்ச்சனை செய்யவும்
சனீஸ்வரரை ஆலயத்தில் மட்டுமே வணங்கவும், வீட்டில் சிவனை வணங்கினால் போதும்
சனிக்கிழமைகளில் கருப்பு ஆடை அணிவது நிலைமை மோசமாகாமல் கட்டுப்படுத்தும்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது சனீஸ்வரரை சாந்தப்படுத்தும்
அன்னதானம் செய்வது சனீஸ்வரரின் கெடுபலன்களை குறைத்துக் கொடுக்கும்
சனிப்பெயர்ச்சியின் விளைவுகளை குறைக்க எள்ளெண்ணெய் விளக்கிடவும்