5 நாள் பயணமாக இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி!

5 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றார் பிரதமர் மோடி அவர்கள்!

Last Updated : May 29, 2018, 12:43 AM IST
5 நாள் பயணமாக இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி!

5 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றார் பிரதமர் மோடி அவர்கள்!

இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தோனேசியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, வருகிற 1-ஆம் நாள் சிங்கப்பூர் செல்கிறார். அங்கு நடைபெறும் ஷான்கிரி- லா மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். 

இந்த சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி தனது முகப்புத்தக்கதில் பதிவிட்டுள்ளதாவது...

ஆஸ்திரேலியா, புருனே உள்ளிட்ட ஆசியா -பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 22 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News