எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் முழுவதும் சுடுகாடாக மாறிவிடும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தப் பின்னர் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அவர்கள், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் "எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் முழுவதும் சுடுகாடாக மாறிவிடும்" என தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ஆம் நாள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாளாக தொடர் போரட்டம் 144 தடை உத்தரவை மீறி நடைபெற்றது. இதனால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் சுமார் 13 பேர் சூட்டு கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The entire problem started after anti-social elements attacked police & burned down Collector's office, as a result peaceful protesters were killed. If you undertake protest for each and everything, Tamil Nadu will be turned into cemetery: Rajinikanth on #Thoothukkudi violence pic.twitter.com/Nmw6RWWCjb
— ANI (@ANI) May 30, 2018
இச்சம்பவம் குறித்து ஏற்கனவே சமூக வலைத்தளம் மூலம் கடும் கண்டனங்கள் பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில், அவர் தற்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை சந்திக்க தூத்துக்குடி சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து நலம் விசாரித்த அவர், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவியும், அதேபோல காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் நிதியுதவி அளிக்கபடும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தூத்துகுடி பயணத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் முழுவதும் சுடுகாடாக மாறிவிடும்" என தெரிவித்துள்ளார்.