மதுரை இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் திருட்டு!

மதுரையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து மர்மநபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Last Updated : May 1, 2018, 08:16 AM IST
மதுரை இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் திருட்டு! title=

மதுரையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து மர்மநபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் பணி ஓய்வை முன்னிட்டு பாராட்டு விழா நடந்தது. அப்போது ஊழியர்கள் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அடையாளம் தெரியாத மர்மநபர்கள் காசாளர் அறையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தினை கொள்ளையடித்துள்ளனர். 

இந்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending News