அழகான சருமத்திற்கு மஞ்சளின் மகிமை மெருகூட்டும் என்பதை நிரூபிக்கும் 6 வழிகள்

மஞ்சள் நமது உணவின் சுவையை கூட்டுவது, மருத்துவ பண்புகள் கொண்டது என்று தெரியும். ஆனால், இதில் அழகுக்கு அழகு சேர்க்கும் பண்புகளும் இருக்கின்றன. அதனால் தான் மஞ்சளையும் நமது பாரம்பரியத்தில் மங்கலப் பொருளாக சேர்த்து, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மஞ்சளுக்கு பிரதான இடம் கொடுக்கிறார்கள்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2020, 05:09 PM IST
அழகான சருமத்திற்கு மஞ்சளின் மகிமை மெருகூட்டும் என்பதை நிரூபிக்கும் 6 வழிகள் title=

புதுடெல்லி: நமது உணவுகளில் வண்ணத்தையும் சுவையையும் சேர்ப்பதைத் தவிர, மஞ்சள் நம்து ஆரோக்கியத்திற்கு அளப்பரிய அதிசயங்களையும் செய்யக்கூடியது. பாரம்பரியமாக நமது சமையலறையில் பயன்படுத்தும் ஒரு பொருள் பல்வேறு நோய்களுக்கு சர்வரோக நிவாரணியாகவும் இருக்கிறது. மஞ்சள், நமது இருதயத்தையும் பலப்படுத்துகிறது, செரிமானத்தையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மூட்டு வலியைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ரத்தம் உறைந்து கட்டியாகமல் தடுக்கவும் பயன்படுகிறது. அது மட்டுமல்ல, Type 2 நீரிழிவு நோய் தொடங்குவதை தாமதப்படுத்தவும், நமது நினைவுத் திறனை மேம்படுத்தவும் உதவும். ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கும் மஞ்சள் ஒரு மசாலாவாக உணவுப் பொருளாகவும் தனது முக்கிய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மஞ்சளின் மகிமை இத்துடன் முடிந்து போவதில்லை. நமது சருமத்தில் மந்திரமாக வேலை செய்யும். இந்திய பெண்கள் மங்கலப் பொருளாக பயன்படுத்தும் மஞ்சள் உண்மையில் ஒரு அழகுப் பொருள் தெரியுமா? தோல் பராமரிப்புகான பொருட்களில் மஞ்சள் ராணி என்றே சொல்லலாம். இத்தனை பெருமை பெற்ற மஞ்சள் நமது தோலுக்கு கொடுக்கும் 6 தோல் நன்மைகளை மட்டும் தெரிந்துக் கொண்டால் போதும், மஞ்சளே நான் உனது அடிமை என்று தலைவணங்கத் தோன்றும்.  

மருத்துவ பலன் கொண்ட மஞ்சள்

தோலின் கரடுமுரடான தன்மை, முகப்பரு ஏற்பட்டதால் உருவாகும் தோல் பிரச்சனை, சருமத்தில் வெடிப்பு, விரிசல், தோலழற்சி என எந்த தோல் பிரச்சினை ஏற்பட்டாலும் சரி, அதற்கு மஞ்சளே மருந்தாக பயன்படும். அது எப்படி தெரியுமா? இதுபோன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்களின் மூலப்பொருள் கண்டிப்பாக மஞ்சளாகவே இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின், பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் வேறு எந்தவொரு பொருளிலும் இல்லாதவை. சரும அழகுப் பொருட்கள் பெரும்பாலனவற்றில் மஞ்சள் சேர்க்கப்பட்டிருக்கும். 

தொடர்புடைய செய்தி | பல நன்மைகள் கொண்ட Aloe Vera-வில் பல Side effects-சும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா

மஞ்சள் மற்றும் தேன், இவை இரண்டையும் சம அளவு எடுத்து, அவற்றை ஒன்றாக கலந்து, அந்த பேஸ்டை முகப்பருவால் பாதிப்பு ஏற்பட்டப் பகுதியில் நேரடியாக தடவி இரவு முழுக்க அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில், குளிர்ந்த நீரில் அந்த இடத்தைக் கழுவவும். முகப்பரு மறைந்து போகும் வரை இந்த செயல்முறையை தினமும் செய்யுங்கள். 
மஞ்சள் (அரை டீஸ்பூன்), சந்தன தூள் (2 டீஸ்பூன்) மற்றும் பால் கலந்து ஒரு பேஸ்டை உருவாக்கி வைத்துக் கொண்டு, வாரத்திற்கு 2 அல்லது 3 முறை ஃபேஸ் பேக்காக இதைப் பயன்படுத்துங்கள்.

சூரிய ஒளியால் தோல் கருத்துப் போவதை தடுக்கும்

மஞ்சள், விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. தொடர்ந்து மஞ்சள் பயன்படுத்தினால், சூரிய ஒளியின் பாதிப்புகளிலிருந்து சருமம் பாதுகாப்பாக இருக்கும்.   மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் காய்ச்சாத பால் ஆகியவற்றை சம அளவில் கலக்கவும். இந்த பேஸ்டை சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தடவி உலர விடவும். குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினசரி ஒரு ஒரு முறை செய்யுங்கள்.

காயங்களை குணப்படுத்துகிறது 
காயங்களை குணப்படுத்தவும், தொற்று அபாயத்தை தடுக்கவும் வடுவை சரியாக்கவும்,மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு + பாக்டீரியா எதிர்ப்பு + கிருமி நாசினிகளின் பண்புகள் இணைந்து செயல்படுகின்றன. தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளை கலந்து பேஸ்ட்டை உருவாக்கி, அதை காயத்தில் தினசரி 2 அல்லது 3 முறை தடவி வந்தால் வலி குறையும். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் சில நாட்களுக்கு மஞ்சள் கலந்த பாலை தினமும் குடிக்கலாம்.

இளமையான சருமம்
மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் உங்கள் சருமத்தை ஃப்ரீ-ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கும், இதன் விளைவாக கரும் புள்ளிகள், தோலில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் குறையும். சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படாமல் இருக்க,  கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20 நிமிடங்கள் விடவும். அதை தண்ணீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யுங்கள்.

சரும வளத்தை மேம்படுத்துகிறது 
சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு மற்றும் ஈர்ப்பை அளிப்பதோடு உங்கள் சருமத்தின் இளமையை அதிகரிக்கும். மஞ்சள் தூள், தேன் மற்றும் பால் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 25 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்யவும். 

குதிகால் வெடிப்பை குணப்படுத்துகிறது

குதிகாலில் வெடிப்பு ஏற்பட்டால், அது அசிங்கமானது தெரிவது மட்டுமல்ல, அது வலியையும் கொடுக்கும். குதிகால் வெடிப்புக்கு மஞ்சளை உபயோகப்படுத்துவது பயனுள்ளது. மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியைக் குறைக்க உதவும், அதன் ஆண்டிமைக்ரோபையல் தன்மை, எந்த பூஞ்சை தொற்றுநோயையும் தடுக்க உதவும். அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி வேப்பிலையின் பேஸ்டை ஒன்றாக கலக்கவும். இந்த பேஸ்டை குதிகால் வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி, 30 நிமிடங்கள் விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நாளொன்றுக்கு 1 அல்லது 2 முறை இவ்வாறு செய்யலாம். மஞ்சள் தூளில் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து அந்தக் கலவையை குதிகாலில் இருக்கும் வெடிப்பு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். வேறு எங்கும் மஞ்சள் கறை படியாமல் தடுக்க, பழைய சாக்ஸை காலில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் கால், உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு இருக்கும்.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News