கடந்த சில நாட்களாக உலகை மிரட்டி வந்த சீனாவின் Long March 5B Rocket இன் பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததுள்ளது. கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றி வந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள், கடலில் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இணைந்து, விண்வெளியில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைத்து, ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு போட்டியாக, சீனா தனியாக டியூன்ஹி என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக, கடந்த மாதம் 29 ஆம் தேதி, Long March 5B Rocket ஐ அனுப்பியது. குறிப்பிட்ட கலனை விண்ணில் நிலை நிறுத்தி விட்டு, பூமிக்கு திரும்பும் என சீன விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்பட்ட லாங் மார்ச் 5 பி, கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி வேகமாக நகர்ந்தது.
ALSO READ | China Rocket: சீனாவின் ராக்கெட் கட்டுப்பாடிழந்து பூமியில் எங்கே வீழும்?
பொதுவாக பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் எந்த பொருளும் காற்றுடன் ஏற்படும் உராய்வில் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் லாங் மார்ச் 5 பியின் பாகங்கள், அதிக உருகு வெப்பநிலையை கொண்டுள்ளதால், அப்படியே பூமியின் மீது விழலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் பூமிக்குள் நுழைந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் விழுந்தன. இன்று காலை 10.24 மணியளவில் ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்தது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR