சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? கிடைத்தது Full Video!

நாம் கடந்து வந்த 2018-ஆம் ஆண்டில் எத்தனையோ வைரல் வீடியோக்களை பார்த்து பிரமித்து இருக்கலாம், ஆச்சரியப்படுத்தி இருக்காலாம். ஆனால் இறுதியாக வந்து முதல் இடம் பிடித்தது "சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?" வீடியோ தான்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2019, 11:42 AM IST
சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? கிடைத்தது Full Video! title=

நாம் கடந்து வந்த 2018-ஆம் ஆண்டில் எத்தனையோ வைரல் வீடியோக்களை பார்த்து பிரமித்து இருக்கலாம், ஆச்சரியப்படுத்தி இருக்காலாம். ஆனால் இறுதியாக வந்து முதல் இடம் பிடித்தது "சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?" வீடியோ தான்.

சில மாதங்களுக்கு முன்னதாக திருப்பூர் சிறுமியின் “அடிக்காம திட்டாம குணமா வாயால சொல்லணும்”-னு மழலை குரலில் பேசிய வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஈர்ப்பு மட்டும் அல்ல, பெற்றோருக்கே அறிவுறை வழங்கிய வீடியோ இது.

அந்த வகையில் தற்போது "சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?" வீடியோ வைரலாகி உள்ளது. இளைஞர் ஒருவர் “இளைஞர் அணி சங்கத்துல நீ சேர்ந்துட்ட.. போய் உங்கப்பாட்ட 2000 ரூபா பணம் வாங்கிட்டு வா” கேட்க, ‘ம்’ என்று தலையாட்டிவிட்டு நகரும் சிறுவனிடம், ‘திரும்ப வருவியா?’ என அவர் கேட்டதும் ‘சாப்டுட்டு வரேன்’ என்கிறான் அப்பாவியாய். அதற்கு அந்த உறவினர், ‘சாப்டுட்டு வறியா?… சங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா?’ என்று கேட்க, ‘சாப்பாடு தான் முக்கியம்’ என்று எதார்த்தத்தைச் சொல்ல, அவர் மீண்டும் அதட்டி கேட்க, ‘எனக்கு பசிக்கும்-ல, நான் சாப்டுட்டு வரக் கூடாதா’ என்று சிறுவன் அழ... அனைவரையும் கவர்ந்துவிட்டான் நம் 'ப்ரனொவ்'

சங்கத்தை விட சாப்பாடு தான் அனைவருக்கும் முக்கியம் என சில அரசியல் தலைவர்களுக்கு மழலை குரலில் பதிலடி கொடுத்துள்ள ஒரு சிறுவனின் வீடியோ 2018-ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி வைரலானது. 30 வினாடி வீடியோவாக வெளியான இந்த வீடியோ, என்னப்பா பாதி வீடியோ தான் போட்டிருக்கீங்க? என அனைவரையும் கேள்வி கேட்க வைத்தது. இந்நிலையில் இந்த வீடியோவின் முழுபகுதி தற்போது கிடைத்துள்ளது.

முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..

அப்படியொரு வீடியோ ஒன்று வருடக் கடைசியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுவனின் உறவினர் ஒருவர், என்று சொல்கிறார். அதற்கு ‘ம்’ என்று தலையாட்டிவிட்டு நகரும் சிறுவனிடம், ‘திரும்ப வருவியா?’ என அவர் கேட்டதும் ‘சாப்டுட்டு வரேன்’ என்கிறான் அப்பாவியாய். அதற்கு அந்த உறவினர், ‘சாப்டுட்டு வறியா?… சங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா?’ என்று கேட்க, ‘சாப்பாடு தான் முக்கியம்’ என்று எதார்த்தத்தைச் சொல்ல, அவர் மீண்டும் அதட்டி கேட்க, ‘எனக்கு பசிக்கும்-ல, நான் சாப்டுட்டு வரக் கூடாதா’ என்று சிறுவன் அழ ஆரம்பித்துவிடுகிறான்.

Trending News