ஷீரடி சாய்பாபா பக்திப் பாடலுக்கு இசையமைத்த இசைபுயல்!

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஷீரடி சாய்பாபா பற்றிய பக்திப் பாடல் ஒன்றிற்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Updated: Apr 15, 2019, 06:03 PM IST
ஷீரடி சாய்பாபா பக்திப் பாடலுக்கு இசையமைத்த இசைபுயல்!

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஷீரடி சாய்பாபா பற்றிய பக்திப் பாடல் ஒன்றிற்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஷீரடி சாய்பாபா பற்றிய பக்திப் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹுமான் இசையமைத்துள்ளார்.

தமிழ்ப் பாடலை மஷுக் ரஹ்மான், ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி பாடல்களை பேலா ஷிண்டே, ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளனர்.

இந்நிலையில் இந்த பாடலை கன்னட மொழியில் ஏன் வெளியிடக்கூடாது என ரசிகர் டுவிட்டரில் கேட்டதற்கு, வேண்டுகோள் ஏற்கப்பட்டது என ஏ.ஆர்.ரஹ்மான் அந்த ரசிகருக்கு பதிலளித்திருக்கிறார். எனவே, விரைவில் கன்னடத்திலும் இந்தப்படால் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் பக்திப் பாடல்களுக்கு இசையமைக்க மாட்டார் என்று கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு தகவல் உண்டு. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் இடம் பெற்ற ஒரு ஐயப்பன் பாடலுக்குக் கூட அப்போது ரஹ்மானின் உதவியாளர் ஆக இருந்த பிரவீண் மணி இசையமைத்தார்.  

இந்நிலையில் தற்போது ஷீரடி சாய்பாபா பற்றிய பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது பாபா பக்தர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.