கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்படிப்பட்ட ரிஸ்கை எடுக்கமாட்டேன்! அலற வைக்கும் வீடியோ

Leopard Viral Video: இந்த மாதத்தில் டிரெண்டிக் வீடியோ இதுதான்... கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்படிப்பட்ட ரிஸ்கை எடுக்கமாட்டேன் என்று அலற வைக்கும் வீடியோ... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 28, 2023, 08:36 AM IST
  • சிறுத்தை கூட்டத்திற்கு உணவளிக்க உயிரை பணயம் வைக்கும் வீடியோ
  • விலங்குகளுக்கு பாசமாய் உணவளிக்கும் பணியாளர்கள்
  • பசின்னு வந்தா சிறுத்தையும் சீறாது...
கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்படிப்பட்ட ரிஸ்கை எடுக்கமாட்டேன்! அலற வைக்கும் வீடியோ title=

சிறுத்தைகள் பசியாறும் வீடியோ வைரல்: விலங்குகள் தொடர்பான பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களில் அதில் யாரோ ஒருவர் பாம்பை பிடிப்பதும், யாரோ சிங்கத்துடன் வேடிக்கை செய்வதும் என பல வித்தியாசமான வீடியோக்களை பார்த்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு அச்சமாக மட்டுமல்ல, அதிர்ச்சியாகும் இருக்கிறது.

வைரலாகி வரும் சிறுத்தை வீடியோவில் ஒன்று, இரண்டு அல்ல, சிறுத்தைகள் கூட்டமாக இருப்பது தெரிகிறது. அதிலும் அவை பசியாக இருப்பது அவற்றின் உறுமலிலும், உணவுக்கு முந்தும் பரபரப்பிலும் தெரிகிறது. அதுதான் அதிக கவலை அளிக்கிறது. ஏனென்றால், பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உண்டான பழமொழியா என்ன?

எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் போட்டுத் தாக்கும் ஒரு விலங்கு முன் நிற்பதற்கே பயமாக இருக்கும் என்றால், இது பசித்திருக்கும் பல மிருகங்களுக்கு இடையில் நிற்கும் மனிதர்களின் வீடியோ என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. 

மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்

அதனால் தான் சிறுத்தைகளுக்கு உணவளிக்கும் வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் உணவு கொடுக்கும் இவர்களின் துணிச்சலுக்கு சல்யூட் அடித்தால், சிலரோ இந்த ரிஸ்க் எதுக்கு என்று கேள்வி கேட்கின்றனர். 
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல என்று சொல்லாமல் சொல்லும் இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள். 

இந்த வீடியோவை பார்த்து ரசித்தீர்களா? இல்லை பயந்தீர்களா? இரண்டும் என்று சொல்பவர்களின் எண்ணிக்கைத் தான் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டிய சில பணிகள் உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரிஸ்க் எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத சில வேலைகள் உண்டு. இந்த வைரல் வீடியோவில், சிறுத்தைகளுக்கு உணவளிக்கும் இரண்டு பேரின் சிரத்தையான வேலையைப் பார்த்து  அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

வைரலாகி வரும் இந்த வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் @TheFigen_ என்ற பயனர் பதிவிட்டுள்ளார் வைரலாகி வரும் வீடியோவில், சிறுத்தை கூட்டத்திற்கு இரண்டு பேர் எப்படி உணவளிக்கிறார்கள் நீங்கள் பார்க்கலாம். இந்த இவர்கள் தேசிய பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் போல் தெரிகிறது.

மேலும் படிக்க | Viral Video: திருமணம் மண்டபம் ஆன விமானம்... நடுவானில் கை கோர்த்த காதலர்கள்!

இருவரின் பணியும் மிகவும் ஆபத்தானது. உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் வேகமான உயிரினம் சிறுத்தைகளுக்கு உணவு அளிக்கும் வேலை என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். ஏனென்றால், சிறுத்தைகளுக்கு கோபம் வந்தால் என்ன ஆகும்? நினைத்தாலே பயமாக இருக்கிறது. 

வைரலாகும் வீடியோ நவம்பர் 23 அன்று பகிரப்பட்டது. இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவைப் பார்த்த, மக்கள் அதைப் பற்றி நிறைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

உணவு கொடுப்பவர்களை மிருகங்களும் ஒன்றும் செய்யாது என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தால், மற்றொருவரோ, கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்படிப்பட்ட ரிஸ்கை நான் எடுக்கவே மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News