பார்ப்பவர்களின் மனதை உருகவைக்கும் அமெரிக்க சிறுவனின் Video!

அமெரிக்கவின் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த தன் சக்ர நார்காலியை விட்டு எழுந்து நின்ற சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Aug 8, 2018, 03:33 PM IST
பார்ப்பவர்களின் மனதை உருகவைக்கும் அமெரிக்க சிறுவனின் Video!

அமெரிக்கவின் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த தன் சக்ர நார்காலியை விட்டு எழுந்து நின்ற சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Leah Norris என்பவர் இந்த வீடியோவினை தன் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... அமெரிக்காவின் கூக்வெய்ல் பகுதியில் புட்நம் கன்ட்ரி பேர் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் போது அமெரிக்க நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

அப்போது தான் அந்த காட்சியை பார்த்தேன்., 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தன் சக்ரநார்காலியை விட்டு எழுந்து நின்று தேசியகீதத்திற்கு மரியாதை செலுத்தினான். இந்த நிகழ்வானது பார்பவர்களின் கண்ணை கலங்கச்செய்கிறது. 

இந்த சம்பவத்தில் இடம்பெற்ற சிறுவனின் பெயர் Avery Price எனவும், பிறந்தநாள் முதல் இவரால் நடக்க இயலாமல் போனதால், சக்கர நார்காலியின் உதவியால் தான் இவர் வாழ்ந்து வருகின்றார் எனவும் தகவல்கள் தெரவிக்கின்றது.

பார்பவர்களின் மனதை உருகவைக்கும் இந்த வீடியோ இணைப்பு உங்களுக்காக...