யானைகள் மிகவும் மென்மையான உயிரினங்களில் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அத்தகைய மென்மையான கனம் கொண்ட யானை குட்டி ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது...
மேலே குறிப்பிட்டுள்ள வீடியோவில், யானை குட்டி ஒன்று பறவைகளின் மந்தையுடன் விளையாடும்போது தவறி தரையில் விழுகிறது. தரையில் விழும் யானை குட்டி அடுத்த நொடி தனது தாயை தேடி ஓடுகிறது. வலி வந்தால் நம் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை அம்மா தானே... இந்த யானை குட்டியும் இதையே தான் செய்கிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ நீங்கள் காணும் மிகவும் அபிமான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். இந்த கிளிப்பை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
"எல்லா குழந்தைகளுக்கும் முழுநேர வேலை இருக்கிறது. அது விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது... எல்லாவற்றிற்கும் மேலாக, அம்மா தான் இறுதி வலி நிவாரணிகள்" என்ற தலைப்பில் அவர் வீடியோவினை பகிர்ந்துள்ளார்.
All kids have a full time job.
That is called PLAY....And for all, mummy is the ultimate pain killers pic.twitter.com/iFJEPvprCA
— Susanta Nanda IFS (@susantananda3) April 11, 2020
வீடியோவில், ஒரு குட்டி யானை பறவைகளின் மந்தையைத் துரத்துவதைக் காணலாம். பறவைகளுடன் விளையாடுவதற்கு அந்த யானை குட்டி சுழன்று சுழன்று ஓடுவதையும் நாம் காணலாம். இருப்பினும், குட்டி யானை இறுதி சுற்று எடுக்கும் போது, அது திடீரென்று தரையில் விழுகிறது. பின்னர் எழுந்து தனது தாயை நோக்கி ஓடுகிறது. வீடியோவை பதிவு செய்த அதிகாரி இந்த முழு காட்சியையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார். இதன் பின்னணியில், கிளிப்பைப் பதிவுசெய்யும் நபர்கள், அபிமான சூழ்நிலையைப் பார்த்து சிரிப்பதைக் கேட்கலாம்.
இதயத்தைத் தூண்டும் வீடியோ இதுவரை 10.4K தடவைகளுக்கு மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மற்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து மேலும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். ட்விட்டர் பயனர்கள் IFS அதிகாரிக்கு இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.
நன்றி தெரிவித்து ஒரு ட்விட்டர் பயனர் எழுதுகையில்., "அது மிகவும் அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி." என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர் "குழந்தை யானையைப் பார்ப்பது எப்போதும் வேடிக்கையாக இருக்கிறது. இது மிகவும் அழகாக இருக்கிறது!" என குறிப்பிட்டுள்ளார்.