பெரியவர்களுக்கு உடற்பயிற்சி கற்றுத்தரும் உலகின் மிகச்சிறிய பயிற்சியாளர்!

குட்டி குழந்தை ஒன்று டான்ஸ் கற்று கொடுக்க அதை போலவே பெரியவர்களும் டான்ஸ் ஆடும் வீடியோ வலைதளத்தில் வைரல்!!

Last Updated : Oct 20, 2019, 04:55 PM IST
பெரியவர்களுக்கு உடற்பயிற்சி கற்றுத்தரும் உலகின் மிகச்சிறிய பயிற்சியாளர்! title=

குட்டி குழந்தை ஒன்று டான்ஸ் கற்று கொடுக்க அதை போலவே பெரியவர்களும் டான்ஸ் ஆடும் வீடியோ வலைதளத்தில் வைரல்!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், குட்டிக்குலனத்தை ஒன்று தன்னை விட பெரியவர்களுக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரளாகி வருகிறது. 

டான்ஸ் ஆட பயிற்சி கொடுக்கும் மையம் ஒன்றில் ஒரு பெண் குழந்தை மற்றவர்கள் ஆடுவதை பார்த்து தானும் ஆட முயற்சித்திருக்கிறது. குழந்தைகளுக்கே உரிய தனி பாணியில் ஆடிய அந்த நடனத்தை கண்டு பலரும் வியந்து போனார்கள். ஏன் அந்த குழந்தையை போலவே நாமும் ஆடக்கூடாது என சிந்தித்த அவர்கள் அந்த குழந்தை போடும் ஸ்டெப்புகளை தாங்களும் போட்டுள்ளனர்.

தன்னை போலவே மற்றவர்களும் ஆடுவதை கண்ட அந்த குழந்தை புதிது புதுதாக ஸ்டெப்புகளை போட்டு அவர்களை ஆட செய்துள்ளது. தற்போது கியூட் குழந்தையின் கூல் டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

 

Trending News