சாஸ்திரி உடன் டிராவிடை ஒப்பிட்ட BCCI, கோபத்தில் ரசிகர்கள்...

ரவி சாஸ்திரி உடன் ராகுல் டிராவிடை ஒப்பிட்ட BCCI-க்கு ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.

Updated: Sep 20, 2019, 02:07 PM IST
சாஸ்திரி உடன் டிராவிடை ஒப்பிட்ட BCCI, கோபத்தில் ரசிகர்கள்...

ரவி சாஸ்திரி உடன் ராகுல் டிராவிடை ஒப்பிட்ட BCCI-க்கு ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.

ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் புகைப்படத்தை BCCI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ‘இரு ஜாம்பவான்கள்’ என்ற தலைபில் பகிர்ந்து கொண்டது. இருப்பினும், அந்த புகைப்படத்தின் தலைப்புக்காக ட்விட்டர் பயனர்களால் ரவி சாஸ்திரி மற்றும் BCCI-னை இரக்கமின்றி கிண்டல் செய்து வருகின்றனர்.

இன்று காலை பதிவிடப்பட்ட இந்த புகைப்படத்தில் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் கைகுளுக்கி சந்திப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் ரசிகர்களுக்கு ஆத்திரம் ஏதும் இல்லை, ஆனால் இந்த புகைப்படத்திற்கு இரு ஜாம்பவான்கள் என தலைப்பிடப்பட்டது தான் தற்போது பிரச்சனை.

இந்திய அணியில் உள்ள திறமை மிக்க வீரர்களை பயன்படுத்திக்க தெரியாமல் திண்டாடும் அணி பயிற்சியாளர் என ரசிகர்களால் விமர்சிக்கப்படும் ரவி சாஸ்திரியை ஜாம்பவான் என எப்படி குறிப்பிடலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் கோபத்தை தாங்கி நிற்கும் ட்விட்டர் பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு,...