இந்தாங்க டீ குடிச்சுட்டு போங்க... பெங்களூருவை திரும்பி பார்க்க வைத்த 3D விளம்பரம்...

சமூக ஊடக தளங்கள் மற்றும் டிவியில் மனதை கவரும் வகையிலான பல விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சாலையோரத்தில் நிறுவப்பட்ட 3D விளம்பர பலகை இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 30, 2024, 11:26 AM IST
  • டிவி திரையில் விளம்பரம் ஓடுவது போல் இருக்கும் இந்த விளம்பர பலகை தற்போது வைரலாகி வருகிறது.
  • AI அம்சத்தின் அதிசயம் எனக் கூறி சிலர் பாராட்டுகிறார்கள்.
  • சாலை பாதுகாப்பு குறித்து சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தாங்க டீ குடிச்சுட்டு போங்க... பெங்களூருவை திரும்பி பார்க்க வைத்த 3D விளம்பரம்...  title=

சமூக ஊடக தளங்கள் மற்றும் டிவியில் மனதை கவரும் வகையிலான பல விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சாலையோரத்தில் நிறுவப்பட்ட 3D விளம்பர பலகை இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. பெங்களூர் திண்டீஸ் (Bangalore Thindies) என்ற உணவகச் சங்கிலியால் விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகையில், ஒரு நபர் ஃபில்டர் காபியை ஊற்றி பொதுமக்களுக்கு வழங்குவதைக் காட்டுகிறது.

விளம்பரப் பலகையின் முப்பரிமாண அம்சங்கள் காரணமாக, விளம்பர பலகையில் உள்ள ஆண், விளம்பர பலகையில் இருந்து வெளியே வந்து உங்களுக்கு ஒரு கிளாஸ் ஃபில்டர் காபி கொடுப்பது போல் தோன்றுகின்றது.

முதலில் பார்க்கும் போது சாதாரண விளம்பர பலகை போல் தெரிகிறது. காபி மற்றும் டீ உணவகம் அமைத்துள்ள 3டி விளம்பரப் பலகையில் ஒருவர் கையில் டீ மற்றும் கண்ணாடியுடன் இருப்பதை வீடியோவில் காணலாம். சிறிது நேரத்தில் அந்த நபர் கண்ணாடி கோப்பையில் தேநீர் ஊற்றத் தொடங்குகிறார். பின் சிரித்த முகத்துடன் டீயை கோப்பையை நீட்டி டீ அருந்துமாறு செய்கை காட்டுகிறார்

விளம்பரப் பலகையைப் பார்த்தது டிவி திரையில் விளம்பரம் ஓடுவது போல் இருக்கும் இந்த விளம்பர பலகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. பலர் இந்த AI அம்சத்தின் அதிசயம் இது எனக் கூறி பாராட்டுகிறார்கள். இருப்பினும், இந்த விளம்பர பலகை, சாலையில் போவோரை திசை திருப்புவதால், சாலை பாதுகாப்பு குறித்து சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஏனெனில் இதுபோன்ற விளம்பர பலகைகள், சாலையில் நடப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் கவனத்தை திசைதிருப்பக்கூடும். இந்த விளம்பரப் பலகையில், பெங்களூர் திண்டீஸ் உணவகத் தொடரின் விளம்பரம் உள்ளது, அதில் ஒருவர் கண்ணாடியில் டீ அல்லது காபியை ஊற்றி பொதுமக்களுக்கு வழங்குவது போல் காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கீழே வர அடம்பிடித்த பூனை..காதை பிடித்து இழுத்து செல்லும் இன்னொரு பூனை! வைரல் வீடியோ..

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்

3டி விளம்பரப் பலகையைப் பார்க்கும்போது உணவக ஊழியர் உண்மையிலேயே டீ சர்வ் செய்வது போல் தெரிகிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ள ஒருவர், பெங்க்ளூரு திண்டி உணவகத்திற்கு, எக்ஸ் தளத்தில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர் என்றார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News