அழகில் புதைந்திருக்கும் பேராபத்து... கடற்கரைக்கு போனால் எச்சரிக்கையா இருங்க..!!

பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் பார்க்கும் பல விஷயங்கள் மிக அழகானவையாக இருக்கும். நமது மனதிற்கு அவை  மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கலாம். ஆனால், அவை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 27, 2024, 02:16 PM IST
  • இயற்கையின் ரகசியங்களை நம்மால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.
  • கொடிய விஷம் கொண்ட ஜெல்லி மீன்கள்
  • கடற்கரைக்கு செல்கையில் எச்சரிக்கை தேவை.
அழகில் புதைந்திருக்கும் பேராபத்து... கடற்கரைக்கு போனால் எச்சரிக்கையா இருங்க..!! title=

பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் பார்க்கும் பல விஷயங்கள் மிக அழகானவையாக இருக்கும். நமது மனதிற்கு அவை  மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கலாம். ஆனால், அவை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  கண் பார்வையில், அழகாக இருக்கும் சிலவற்றுக்கு பின்னால் மரணச் செய்தி மறைந்திருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 

இயற்கையால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே அற்புதமானவை. ஒவ்வொன்றிலும், ஒரு தனித்தன்மை நிறைந்திருக்கும். சிலவற்றை பார்க்கும் போது நம் மனதில் தோன்றும் விஷயங்களும், அதன் உண்மை தன்மையும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம். கண்களுக்கு அழகாக தோன்றூவதால், அதன் தன்மையும் அவ்வாறே இருக்கும் என கூற முடியாது. சில பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருக்கலாம். ஆனால், உண்மையில் ஆவை ஆபத்தில்லாதவையாக இருக்கலாம். இயற்கையின் ரகசியங்கள் நம்மால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.

கோடையில் கடற்கரைக்கு செல்வது  என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இருப்பினும், இதற்குப் பின்னால் ஆபத்துகளும் உள்ளன. இது குறித்து பலருக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை. கடல் வாழ்க்கை மிகவும் மர்மமானதாகக் கருதப்படுவதற்கு இதுவே காரணம். இங்கு எப்போது என்ன ஆபத்து வரும் என்பதை கணிக்கவே முடியாது. கோடைகாலம் காரணமாக சில ஆபத்தான உயிரினங்கள், கடலில் இருந்து கடற்கரைக்கு அதிகம் வருகின்றன. இது கடல் அலைகளை விரும்பி செல்வோருக்கு பேராபத்தை ஏற்படுத்தும். அதில் ஒன்று ஜெல்லி மீன்கள் (Jelly Fish). இதை பற்றி தெரிந்து கொள்வோம் 

போர்த்துகீஸ் மேன் ஓ வார் (Portuguese man o’ war)

போர்த்துகீசிய மேன் ஓ வார் என்று பெயரிடப்பட்ட உயிரினம் ஜெல்லி மீன் வகை. இது 30 முதல் 100 அடி நீளமுள்ள வால் போன்ற அமைப்பை கொண்டுள்ளது. இது மிகவும் விஷமானது. வேட்டையாட உதவும் இந்த நூல் போன்ற முனைகள். தண்ணீரிலிருந்து வெளியே வந்த பிறகும் இது பல வாரங்களுக்கு சுறுசுறுப்பாக இயங்க கூடியது. இந்த மீன் கடித்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும். மீன் கடித்தால், உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை பாதிக்கப்பட்ட இடத்தில் ஊற்ற வேண்டும் என்றும், தவறுதலாக கூட அந்த இடத்தில் கீறவோ, தேய்க்கவோ கூடாது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஜெல்லிமீன்

மற்றொரு ஆபத்தான ஜெல்லிமீன் ஆகும். இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. சமீபத்தில் திருச்செந்தூரின் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்பட்டதால், கடலில் குளிக்க ஹடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க |  நடுரோட்டில் போலீசை வம்பிழுக்கும் நாய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மணல்  சுறா

சிறு பற்களைக் கொண்ட மணல் சுறாக்களும் (Smalltooth sand tiger shark) கோடையில் கடலுக்குத் திரும்பத் தொடங்குகின்றன. தண்ணீருக்குள் இருப்பதுதான் இவற்றின் சிறப்பு. அத்தகைய சூழ்நிலையில், இது டைவர்ஸுக்கு தீங்கு விளைவிக்கும்.

வீவர் பிஷ்

வீவர் பிஷ் எனப்படும் மீன்களும் Weaver fish விஷத்தன்மை கொண்டது. அதன் முதுகு மற்றும் செவுள்களில் விஷம் உள்ளது. அவர்கள் பகலில் மணலில் புதைத்து இருக்கும். இவற்றின் கண்கள் மட்டுமே தெரியும். ஒருவர் தற்செயலாக அதன் மீது கால் வைத்தால், கொட்டும் தன்மை கொண்டது. இது கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு தொற்றுநோயையும் ஏற்படுத்தும்.

டெய்லி ஸ்டார் பத்திரிக்கையிடம் பேசிய Anglesey Sea Zoo  இயக்குனர் பிராங்கி ஹோப்ரோ, இந்த மீன்கள் கடலில் ஆழமாக வாழ்கின்றன, ஆனால் வானிலை வெப்பமாக இருக்கும் நிலையில், அவை மேல்நோக்கி வருகின்றன. இவற்றைத் தவிர்க்க, கம் பூட்ஸ் அணிவதும், சுற்றுப்புறத்தை கவனித்து நடப்பதும் அவசியம் என்கிறார்.

மேலும் படிக்க | முத்தம் கொடுத்தது ஒரு குத்தமா... மணமகனை அடித்து துவைத்த மணப்பெண் வீட்டார்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News