’கொழுத்த தீனி’ பன்றியால் கண்ணீர்விடும் உரிமையாளர்

பிரேசில் நாட்டில் செல்லமாக வளர்த்த பன்றிக்குட்டி ஒன்று, கொழுத்த தீனி சாப்பிடுவதாக உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2021, 05:10 PM IST
’கொழுத்த தீனி’ பன்றியால் கண்ணீர்விடும் உரிமையாளர் title=

பிரேசில் (Brazil) நாட்டின் சாவோபாலோ கடற்கரைப் பகுதியில் உள்ள பெருயிப் நகரில் ரோசாங்கலா டி லாரா என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு நாய்க்குட்டி வளர்ப்பதில் பிரியம் இருந்தாலும், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பன்றிக் குட்டி ஒன்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார். சிறிய வகை பன்றிக் குட்டி என நினைத்து வாங்கியுள்ளார். அதாவது, சிறியவகை பன்றி என்றால் அதிகபட்சம் 20 முதல் 35 இன்ச் உயரம் மட்டுமே வளரக்கூடியது என அவர் நினைத்துள்ளார்.

ALSO READ | இறந்த குரங்கை உயிர்பித்த குரங்கு - வைரல் வீடியோ

ஆனால், லாராவின் செல்லப் பிராணியான லிலிகா பன்றிக்குட்டி இப்போது 5 உயரம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கும்போது மிகச்சிறியதாக இருந்ததாகவும், இப்போது வளர்ந்துவிட்டதாகவும் லாரா கூறியுள்ளார். இதில் காமெடி என்னவென்றால், பன்றிக்குட்டி நாள்தோறும் கொழுத்த தீனியை தின்கிறதாம். 3 வயதுடைய லிலிகா நாள்தோறும் 5 கிலோ பழம் மற்றும் காய்கறிகளும், இதுதவிர இதர தீனிகளும் வெளுத்து வாங்குகிறதாம்.

இதனால் வேதனைக்கு ஆளாகியுள்ள லாரா, பன்றிக்குட்டி இப்படி சாப்பிடும் என நினைக்கவில்லை என கூறியுள்ளார். செல்லப் பிராணியாக வளர்த்துவிட்டதால் விற்பனை செய்யவும் மனம் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். லாரா இப்போது சிறிய அப்பார்ட்மென்டில் வசித்து வருகிறார். குடும்ப உறுப்பினர்களுக்கே இடம் நெருக்கடியாக இருக்கும் சூழலில், 5 அடி உயரமுள்ள இந்தப் பன்றிக்குட்டியும் வீட்டில் இருப்பது கொஞ்சம் சிரமமாக தான் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாசம் ஊட்டி வளர்த்துவிட்டதால் என்ன செய்வது? என குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். செல்லப் பிராணியாக பன்றியை வளர்க்க ஆசைப்பட்டு, அதனை வளர்த்து இப்போது அது சாப்பிடும் தீனிக்காக உரிமையாளர் சோஷியல் மீடியாவில் கண்ணீர்விட்டிருப்பது நெட்டிசன்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | Viral Video: கேமராவில் சிக்கிய நாகப்பாம்பு Vs கீறி சண்டை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News