மணமகளின் வேற வெவல் மாஸ் எண்ட்ரி: முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி, வைரல் வீடியோ

Funny Wedding Video: இந்த வீடியோவுக்கு இதுவரை 27,000 வியூஸ்கள் கிடைத்துள்ளன. இந்த ஜோடியின் காதலும் அன்பும் காண்பவர்கள் கண்களை ஈரமாக்கியது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 03:30 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
மணமகளின் வேற வெவல் மாஸ் எண்ட்ரி: முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்திய திருமணங்கள் அழகானவை, வண்ணமயமானவை. பாரம்பரியம், இசை, நடனம் மற்றும் காதல் நிறைந்தவை. அழகியலுக்கு இந்திய திருமணமும் ஒரு அற்புதமான உதாரணம். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு மணப்பெண்ணின் திருமண எண்ட்ரி வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்த வீடியொ 'theweddingbrigade’ என்ற பக்கத்தால் பதிவேற்றப்பட்டது. திருமணம் குறித்து இந்த மணப்பெண்ணுக்கு இருக்கும் மகிழ்ச்சியும் துடிதுடிப்பும் இந்த வீடியோ-வில் நன்றாக தெரிகிறது. 

மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 

மணமகள் வெளிர் பிங்க் நிற லெஹங்காவில் அழகு தேவதையாக இருக்கிறார். அவர் தனது திருமண மேடைக்கு நுழையும்போது, அவருடன் வரும் அவரது சகோதர சகோதரிகளும் அதே நிறத்தில் உடைகளை அணிந்துள்ளனர். மணமகளும் அவரது வீட்டாரும் ஒரு அழகான பாடலுக்கு நடனமாடியபடி மணமேடைக்குள் நுழைகிறார்கள். 

பல பாடல்கள் கலந்த இசை பின்னணியில் ஒலித்டுக்கொண்டிருக்க, மணமகளின் முகத்தில் மகிழ்ச்சி என்ற உணர்வு அப்பட்டமாகத் தெரிகிறது. தனது வருங்கால கணவருக்கான மணமகள் அழகான அந்த நடனத்தை அர்ப்பணிக்கிறார். 

நடன அமைப்பு அழகாகவும், துடிதுடிப்பாகவும் உள்ளது. மணமகளுக்காக காத்திருக்கும் மணமகனும் பாடலுக்கு நடனமாடுவதை காண முடிகின்றது. மணமகளின் வேகம் அவரையும் பற்றிக்கொள்கிறது. 

மாலை மாற்றும் சடங்கு வரை நடனமாடும் ஜோடி, சந்தோஷமாக மாலை மாற்றிக்கொள்கிறார்கள். மணமக்களும், மாலைகளும், அங்கு செய்யப்பட்டிருக்கும் அலங்காரமும் அவ்விடத்தை சொர்க்கமாக மாற்றுகிறது. 

இந்த வீடியோவுக்கு இதுவரை 27,000 வியூஸ்கள் கிடைத்துள்ளன. இந்த ஜோடியின் காதலும் அன்பும் காண்பவர்கள் கண்களை ஈரமாக்கியது. 

மணமகளின் வேற லெவல் எண்ட்ரி வீடியோவை இங்கே காணலாம்: 

மேலும் படிக்க | ‘சாமி சாமி’ பாட்டுக்கு மாஸா டான்ஸ் ஆடி மேடையை அதிர வைத்த பாட்டி: ரசிக்கும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News