இப்பவே இப்படியா? திருமண மேடையில் நடந்த காமெடி கலாட்டா: வீடியோ வைரல்

ஒரு திருமண ஜோடி மாலை மாற்றும்போது எடுகப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 15, 2022, 05:19 PM IST
  • திருமண மேடையில் விழப்போன மணமகன்.
  • உடனடியாக கரம் கொடுத்து காப்பாற்றிய மணமகள்.
  • மணமகளை பாராட்டும் இணையவாசிகள்.
இப்பவே இப்படியா? திருமண மேடையில் நடந்த காமெடி கலாட்டா: வீடியோ வைரல் title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

மணமகன் மற்றும் மணமகளின் எண்ட்ரி, மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல், இருவரும் ஒன்றாக நின்று விருந்தினர்களிடம் பேசும் வீடியோக்கள் என திருமண நிகழ்வுகள் அனைத்தையும் இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். தற்போதும் ஒரு திருமண ஜோடி மாலை மாற்றும்போது எடுகப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

இந்த வீடியோவில், மாலை மாற்றும்போது மணமகன் மேடையிலிருந்து விழுப்போவதைக் காண முடிகின்றது. ஆனால், அப்போது விரைவாக மணமகள் அவர் கையைப் பற்றி அவரை விழாமல் காப்பாற்றினார். மணமகளின் சமயோஜித புத்தியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

மணமகள் மணமகனைக் காப்பாற்றினார்

சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் மணமக்கள் இருவரும் மேடையில் ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவிப்பதை காணமுடிகிறது. ஆனால் இதற்கிடையில், மணமகன் சற்று பின்வாங்கி மேடையின் விளிம்பை அடைகிறார். இதன் காரணமாக அவர் மேடையில் இருந்து விழுப்போகிறார். ஆனால், மேடையில் இருந்து விழுவிருந்த மணமகனை மணமகள் (Bride) உடனே பிடித்து காப்பாற்றி விடுகிறார். மணமகளின் சுறுசுறுப்பை மக்கள் பாராட்டி வருகின்றனர். 

மணமகளின் சமயோஜித புத்தியை காட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

வைரலாது சுறுசுறுப்பு மணமகளின் வீடியோ 

இந்த வீடியோ (Viral Video) rahul.dhakad.503 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ பகிரப்பட்டுள்ளதோடு, இந்த வீடியோவுடன் திருமணம் தொடர்பான அனைத்து ஹேஷ்டேக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

தற்போது இந்த வீடியோவிற்கு மக்கள் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், 'மணமகள் மணமகனை கைப்பற்றி காப்பாற்றிய விதம், அந்த தருணம், என் இதயத்தை வென்றது.' என்று எழுதியுள்ளார்.

வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News