ஆமைக்கு உதவிய எருமை: புல்லரித்துப்போன இணையவாசிகள், வைரல் வீடியொ

Animal Viral Video: ஆமைக்கு உதவிய எருமை மாடு!! நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளும் வியக்க வைக்கும் நட்பை அவ்வப்போது காட்டுகின்றன. இதை நிரூப்பிக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2022, 06:48 PM IST
  • சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் படையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆமைக்கு உதவிய எருமை: புல்லரித்துப்போன இணையவாசிகள், வைரல் வீடியொ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் படையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகள் இரக்கமுள்ள உயிரினங்கள். இவை காட்டும் கருணை மற்றும் பெருந்தன்மையை அவ்வப்போது நாம் காண முடிகின்றது. வாய்மொழி தொடர்பு இல்லாத போதிலும், மற்றொரு விலங்குக்கு தேவை எழும்போது இவை புரிந்துகொள்கின்றன. 

தற்போது, ​​ஒரு எருமை மாடு தனது கொம்பைப் பயன்படுத்தி தலைகீழாக விழுந்திருந்த ஆமைக்கு உதவும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், தலைகீழாக கவுந்திருக்கும் ஒரு ஆமையை காண முடிகின்றது. அந்த ஆமைக்கு உதவி, அதை நேராக்க ஒரு எருமை மாடு முயற்சிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | மழை பெஞ்சா என்ன, நமக்கு சோறு முக்கியம்: மாஸ் காட்டிய பிரியாணி பாய்ஸ்

ஆமையை இயல்பு நிலைக்கு கொண்டு வர எருமை வெகுவாக முயற்சிக்கிறது. இறுதியாக, தனது முயற்சியில் வெற்றியும் பெறுகிறது. இந்த வீடியோவைப் பதிவு செய்து கொண்டிருந்தவர்களும் இதைப் பார்த்து மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்கிறார்கள். 

ஆமைக்கு எருமை செய்த உதவியை அனைவரும் வெகுவாக பாராட்டுகிறார்கள். ஆமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பின்னர், பெருமையுடனும் கம்பீரத்துடனும் எருமை நடந்து வரும் விதம் பார்க்க அழகாக இருக்கிறது. 

ஆமைக்கு உதவிய எருமையின் வீடியோவை இங்கே காணலாம்:

முதலில் TikTok பயனர் @manaskamran என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த குறுகிய வீடியோ , நெட்டிசன்களால் பலமுறை பகிரப்பட்டது. இந்த வீடியோ Laughs 4 All என்ற ட்விட்டர் கணக்கில் மீண்டும் வெளிவந்துள்ளது.

எருமையின் இந்த அன்பான சைகை மக்களின் இதயங்களை வென்றது. எருமையின் உதவும் குணத்தைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். ஒரு பயனர், "இங்குள்ள விலங்குகள் மனிதர்களை விட அதிக இரக்கமுள்ளவையாக உள்ளன." என்று கூறினார். மற்றொரு பயனர், "இது ஆச்சரியமாக இருக்கிறது. எப்படியோ காளை ஆமையிடம் பரிவு கொண்டது என்பதே ஒரே விளக்கம். அற்புதம்!” என்று கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | Viral Video: தங்க செயினை திருடும் எறும்புகள்; எந்த IPC செக்‌ஷனில் புக் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News