யார் எடத்துல வந்து யார் சீன் போடுறது...நாயை அடித்து அலறவிட்ட பூனை!

பூனை ஒன்று சோஃபாவில் அமர்ந்திருந்த நாயிடம் சண்டை போட்டு கீழே விரட்டிவிட்டு, பின்பு அந்த பூனை படுத்து கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 3, 2022, 02:27 PM IST
  • சோபாவில் அமைதியாக தூங்கும் நாய்.
  • அடித்து விரட்டி விட்டு தூங்கும் பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
யார் எடத்துல வந்து யார் சீன் போடுறது...நாயை அடித்து அலறவிட்ட பூனை! title=

மனிதர்கள் தான் இடத்தை பிடிக்க அடித்துக்கொள்வார்கள் என்று நினைத்தால் இப்போதெல்லாம் விலங்குகளும் மனிதர்களை போலவே இடத்திற்காக சண்டையிட தொடங்கிவிட்டது.  பூனை ஒன்று நாயிடம் சண்டையிட்டு சாமர்த்தியமாக அதனை கீழே தள்ளி அந்த இடத்தை பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  சில வீடியோக்களில் நாய் இனங்களும், பூனை இனங்களும் ஒன்றுக்கொன்று நட்பு பாராட்டி கொண்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்.  அவர்களுக்கிடையேயான பாசப்பிணைப்பு எப்படி நம்மை ரசிக்க வைக்கிறதோ அதேபோன்று விலங்குகள் அடித்துக்கொள்ளும் காட்சியும் நமக்கு ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க | யாரு பெருசுனு அடுச்சு காட்டு..மாறி மாறி சண்டையிடும் பூனைகளின் வைரல் வீடியோ!

இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் நாய் ஒன்று சோஃபா மீது அமர்ந்திருப்பதையும், சோஃபாவுக்கு அருகில் கீழே தரையில் பூனை ஒன்று நின்றுகொண்டு இருப்பதையும் காண முடிகிறது.  பின்னர் அந்த பூனை நாயிடம் சண்டையிட தொடங்குகிறது, ஒரே தாவலில் சோஃபா மீது ஏறிய பூனை, அங்கு அமர்ந்துள்ள நாயை அடிக்க தொடங்குகிறது.  பூனையிடம் சண்டையிட்டு ஜெயிக்கமுடியாமல் உடனே அந்த நாய் அலறியடித்துக்கொண்டு கீழே வந்து படுத்து கொள்கிறது.  அதன் பிறகு அந்த பூனை சோஃபாவில் சாவகாசமாக படுத்துக்கொண்டு இருக்கிறது, அந்த நாய் பாவமாக ஒரு ஓரத்தில் தரையில் படுத்து இருக்கிறது.

 

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு ஐம்பத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், ரசிக்கும்படியான கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | வெச்ச குறி தப்பாது: வேற லெவலில் வறட்டி தட்டி வைரலான பெண் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News