தென் அமெரிக்க நாடான சிலியில் செய்தியாளர் ஒருவர் நேரலையில் செய்தியை வழங்கிக் கொண்டிருந்தார். சாண்டியாகோவில் நின்று கொண்டு முக்கிய செய்தியை நேரலையில் தொகுத்து கோர்வையாக வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பறந்து வந்த கிளி அவரின் தோள் மீது சமத்தாக உட்கார்ந்து கொண்டது. நேரலையில் தொலைக்காட்சியை பார்த்தவர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது. ஆனால் அப்போது யாருக்கும் தெரியவில்லை, அந்த கிளி திருட்டு கிளி என்று.
பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நின்று கொண்டு, அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நிருபர் நேரலையில் கூறிக் கொண்டிருந்தார். பாதுகாப்பற்ற என்ற வார்த்தையை கூறும்போது தோள்பட்டையில் அமர்ந்திருந்த கிளி, செய்தியாளரின் காதில் இருந்த இயர்பேட்டை கவ்விச் சென்றது. அவரும் என்ன நடக்கிறது என புரியாமல் சிறிது நேரம் விழித்து, சுதாரிப்பதற்குள் கிளி பறந்து சென்றது. உடனடியாக நேரலையை கட் செய்துவிட்டு, ஒளிப்பதிவாளருடன் இணைந்து அந்த கிளியை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், அந்த திருட்டு கிளி படுவேகமாக பறந்து சென்றுவிட்டது.
TV reporter is robbed while talking about high crime... by a #PARROT #Bird swoops on journalist's shoulder and flies off with his earpiece in #Chile pic.twitter.com/DpVoJ6oMmv
— Hans Solo (@thandojo) November 5, 2022
இன்றைய நேரலையில் அவர் திருட்டு பற்றி கூறிக் கொண்டிருக்கும்போதே திருட்டு கிளியால் தன்னுடைய இயர்பேடை இழக்க நேரிட்டது. இப்போது திருட்டு கிளியை எப்படி பிடிப்பார்கள் என தெரியவில்லை. நகைச்சுவையான இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் செய்தியாளருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி சிரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!
மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ