நீ சுற்றுலா வந்தது எனக்கு பிடிக்கல: பயணியை விரட்டும் கோபக்கார யானை

Viral Video of Angry Elephant: காட்டுக்கு சுற்றுலா செல்வது நமக்கு பிடித்திருக்கலாம். ஆனால், அது விலங்குகளுக்கு பிடிக்குமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் சுவாரசியமான வீடியோ

Last Updated : Jun 17, 2022, 02:17 PM IST
  • மதம் பிடித்த யானையின் கோபம்
  • சீறும் யானை, சிதறியோடும் பயணிகள்
  • என்ன பார்த்தா பயமா இல்லையா? துரத்தியடிக்கும் யானை
நீ சுற்றுலா வந்தது எனக்கு பிடிக்கல: பயணியை விரட்டும் கோபக்கார யானை title=

காட்டுக்குள் வசிக்கும் விலங்குகளை மனிதர்கள் சுற்றுலாவாக சென்று ரசித்து, இயற்கையை அனுபவித்து வருவது வழக்கம். நமக்கு வனப் பயணம் பிடித்திருக்கலாம். ஆனால், அது விலங்குகளுக்கு பிடிக்குமா? இந்த கேள்விக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா?

பதில் சொல்வதுபோல வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகிறது யானை வீடியோ ஒன்று. பல யானைகள் கூட்டமாக மந்தையாக இருக்கும் இந்த வீடியோவில், ஒரு யானை மட்டும் கோபத்தில் துரத்துவதைக் காண முடிகிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும்போது இது ஹீரோ யானையா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. யானை ஹீரோவா அல்லது கோபக்கார யானையா என்றால் முரட்டு ஹீரோ என்று சொல்லலாம்.

மேலும் படிக்க | வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை - வீடியோ

இந்த ஹீரோ யானைக்கு என்ன நடந்ததோ, ஆனால் தும்பிக்கைக்கு மேலே கோபம் வந்து அடித்து துவைக்க ஓடுகிறது. வாகனத்தில் பயணி நின்றுக் கொண்டே பறக்கிறார்.

காட்டு யானையின் சீற்றத்துக்கு முன் யாராலும் நிற்க முடியுமா? யானைகள் அப்பகுதியில் மந்தையாக முகாமிட்டுள்ளன. கூட்டமாக சுற்றித்திரியும் காட்டு யானைகள், இலை, கொடி தலைகளை தேடித் தேடி உண்ணும் நேரத்தில் வாகனத்தில் சென்ற பயணிகளைப் பார்த்து ஒற்றை யானை மட்டும் சீற்றத்துடன் துரத்துகிறது.

பிளிறிக் கொண்டு துரத்தும் யானையின் சீற்றத்தைப் பார்த்து, துண்டைக்காணோம், துணியைக் காணோம் என்று பதறியடித்து அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடுகிறார் சுற்றுலாப் பயணி, இந்த யானையின் துரத்தல் வீடியோ பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

இது எங்க ஏரியா... உள்ள வராத என்று யானை எச்சரிக்கிறதா? தெரியவில்லை. ஆனால், வன விலங்குகளின் வாழ்க்கையை நமது பொழுதுபோக்கால் மனிதர்கள் இடையூறு செய்கிறோம் என்பது புரிகிறது.

மேலும் படிக்க | ஆற்று நீரில் சிக்கிய நாயை மீட்ட இளைஞர்...வைரல் வீடியோ!

வனவிலங்குகள் வருகையையொட்டி, அங்கு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்று காண்பித்து வருகிவது வழக்கம்.. வழக்கமாக இது நடைபெறக்கூடிய ஒன்று என்றாலும், யானை ஒன்று துரத்துவது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

யானைகள் கூட்டமாக இருந்தாலும் அதில் ஒற்றை யானைக்கு மட்டும் தான் கோபம் வந்து துரத்துவதும் கவனிக்கத்தக்கது. இந்த வீடியோவை சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வித்தியாசமான வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

நமக்கு பார்ப்பதற்கு திரில்லான அனுபவமாக இருந்ததாலும் அந்த சில நிமிடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டது மரண பயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது.  

மேலும் படிக்க | இறந்த குட்டியின் உடலை சுமந்து செல்லும் தாய் யானை; கண்ணீரை வரவழைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News